தமிழ் சினிமாவில் ஹீரோ படத்தின் மூலம் கதாநாயகியாக அறிமுகமானவர் கல்யாணி பிரியதர்ஷன். இப்படம் இவருக்கு எதிர்பார்த்த அளவிற்கு பெரிய அளவில் வரவேற்பை பெற்றுக் கொடுக்கவில்லை. அதனால் அடுத்தடுத்த படங்களின் மீதான கவனத்தை செலுத்த ஆரம்பித்தார்.
அப்போதுதான் வெங்கட்பிரபு மாநாடு படத்தின் கதையை கல்யாணி பிரியதர்ஷனிடம் கூற கதையில் உள்ள சுவாரஸ்யம் பிடித்து போக படத்தில் நடிப்பதாக கூறினார். இப்படம் எதிர்பார்த்ததை விட மிகப்பெரிய அளவில் வரவேற்பு பெற்று வருகிறது.
ஆனால் சிம்பு நடிப்பில் சமீபகாலமாக வெளியான எந்த படங்களும் பெரிய அளவில் வரவேற்பு பெறவில்லை. அதற்கு காரணம் சிம்புவின் உடல் அமைப்புதான் முன்புபோல் இல்லாமல் சிம்பு பலமடங்கு குண்டாக இருந்தது. அவரது படத்தின் தோல்விக்கு முக்கிய காரணமாக பார்க்கப்பட்டது.
மாநாடு படத்திற்காக சிம்பு எப்படி தனது உடலமைப்பை குறைத்தார். அதே போல் சினிமாவில் நடிக்க ஆர்வம் வந்ததால் கல்யாணி பிரியதர்ஷன் உடல் எடையை குறைத்துள்ளார். அதாவது சினிமாவில் நடிப்பதற்கு முன்பு குண்டாக இருந்துள்ளார். அப்போது எடுக்கப்பட்ட புகைப்படம் தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
இதனை பார்த்த ரசிகர்கள் கல்யாணி பிரியதர்ஷன் இவ்வளவு குண்டாக இருந்துள்ளார் என ஆச்சரியத்தில் உள்ளனர். மேலும் சிம்பு போலவே கல்யாணி பிரியதர்ஷன் தனது உடல் எடையை குறைத்துள்ளது. தற்போது அவர் சினிமாவில் வெற்றி பெறுவதற்கு முக்கிய காரணமாக பார்க்கப்படுகிறது. தற்போது இருவரும் உடல் எடையை குறைத்து உள்ளதால் இனிவரும் காலங்களில் சினிமாவில் அடுத்தடுத்து வெற்றி பெறுவார்கள் என ரசிகர்கள் கூறி வருகின்றனர்.