வெள்ளிக்கிழமை, ஜனவரி 10, 2025

அபிராமியை விரட்டி விரட்டி வேட்டையாட நினைத்த கமல்.. விருமாண்டி பட உண்மையைச் சொன்ன பிரபலம்

நடிகர் கமல்ஹாசனுடன் கிசுகிசுக்கப்படாத நடிகைகளே இல்லை என்றுதான் சொல்ல வேண்டும். அந்த அளவுக்கு தன்னுடன் நடிக்கும் நடிகைகளுடன் நெருக்கமான காட்சிகளில் நடித்து பல்வேறு கிசுகிசுக்களை ஏற்படுத்தி விடுவார்.

இதனால் அந்த நடிகைகளின் சினிமா வாழ்க்கையும் கேள்விக்குறியானது. அந்தவகையில் கமலஹாசனுடன் கிசுகிசுக்கப்பட்ட நடிகைகள் யார் யார் என்று லிஸ்ட் போட்டால் மயக்கமே வந்துவிடும்.

கமல்ஹாசன் படங்களில் ரொமான்ஸ் காட்சிகள் இருப்பது சாதாரண விஷயம் தான். மற்ற நடிகர்களைவிட கமலஹாசன் கொஞ்சம் நடிகைகளுடன் நெருங்கி ரொமான்ஸ் செய்வது காலம் காலமாக நடைபெற்று வருகிறது.

அந்த வகையில் தான் இயக்கிய விருமாண்டி படத்தில் மலையாள நடிகை அபிராமி உடன் கொஞ்சம் ஓவராகவே ரொமான்ஸ் காட்சிகளில் நடித்தார் கமல். படத்தில் நடிக்கும்போது இருவருக்கும் காதலென பத்திரிகைகளில் பரபரப்பான செய்திகள் பட்டி தொட்டி எங்கும் வெளியானது.

இதனால் அபிராமிக்கு பெரிய அளவு அடுத்ததாக வாய்ப்புகள் வரவில்லை எனவும் கூறுகின்றனர். ஆனால் அபிராமி சினிமாவை விட்டு வெளிநாட்டில் சென்று செட்டில் ஆனதற்கு காரணம் கமலஹாசன் விருமாண்டி படம் முடிந்த பிறகும் அபிராமியை துரத்தித் துரத்தி டார்ச்சல் செய்தது தான் என்கிறார் பிரபல பத்திரிகையாளரும் நடிகருமான பயில்வான்.

kamal-abirami-cinemapettai-01
kamal-abirami-cinemapettai-01

கடந்த சில மாதங்களாகவே பயில்வான் ரங்கநாதன் தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்கள் முதல் இளம் நடிகர்கள் வரை நடிகைகளுடன் கிசுகிசுக்களில் ஈடுபடுவதை வெட்ட வெளிச்சமாக்கி வருகிறார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

Trending News