வியாழக்கிழமை, ஜனவரி 23, 2025

கமல், அஜித், சூர்யா ஒன்றாக நடிக்க முயற்சி.. லோகேஷ் யுனிவர்ஸலை உடைக்க கௌதம் மேனன் போட்ட திட்டம்!

Director Gautham Menon: தற்பொழுது டாப் ஹீரோக்களை குறி வைத்து, படம் இயக்கி வெற்றிக் கண்டு வருகிறார் லோகேஷ் கனகராஜ். அந்த அளவிற்கு சினிமா வட்டாரங்களில் பெரிதளவு பேசப்படும் இவரை முறியடிக்க கௌதம் மேனன் மேற்கொள்ளும் முயற்சி பற்றிய தகவலை இங்கு காண்போம்.

தான் இயக்கம் படங்களின் மூலம் விமர்சன ரீதியாய் மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்று வரும் இயக்குனர் தான் கௌதம் வாசுதேவ் மேனன். இவரின் எண்ணற்ற படங்களில் காக்க காக்க, வேட்டையாடு விளையாடு, விண்ணைத்தாண்டி வருவாயா, வெந்து தணிந்த காடு போன்ற படங்களின் மூலம் சிறந்த இயக்குனருக்கான விருதினை கைப்பற்றினார்.

Also Read: கவுண்டமணி என் வாழ்க்கையை நாசமாக்கிட்டாரு.. அண்ட புளுகு நடிகையின் முகத்திரையை கிழித்த பயில்வான்

சமீபத்தில் வேட்டையாடு விளையாடு ரீ ரிலீஸ் செய்து நல்ல வசூலை பெற்றதன் பொருட்டு தற்பொழுது இப்படத்தின் பாகம் 2வை எடுக்க திட்டம் தீட்டி வருகிறார். இதைகுறித்து கேட்டபோது ஆம் உண்மைதான் தற்பொழுது பெரிதாக பேசப்படும் லோகேஷ் கனகராஜ் மாதிரி எனக்கு என்று ஒரு யுனிவர்ஸ் உருவாக்க திட்டமிட்டு இருக்கிறேன்.

அதற்கான பிளானை விரைவில் செயல்படுத்துவேன் எனவும், ஏற்கனவே அதற்கான வேலையும் தொடங்கி விட்டதாக கூறி வருகிறார். மேலும் அதற்கான கதையோடு டாப் ஹீரோக்களான கமல், அஜித், சூர்யா போன்றவர்களின் கூட்டணியில் களமிறங்க போவதாக கூறினார்.

Also Read: மலேசியாவில் அசிங்கப்பட்ட சிவகார்த்திகேயன்.. வாண்ட்டாக போலீஸிடம் மாட்டிக் கொண்ட நிலை

இது குறித்த பேச்சு வார்த்தை, கமல் அமெரிக்காவில் இருந்து வந்த பிறகு தொடங்க உள்ளதாகவும் கூறினார். மேலும் இப்படத்தில் சூர்யா (அன்பு செல்வன்), கமல் (ராகவன்), அஜித் (சத்யதேவ்) போன்ற மூன்று பேரையும் இணைத்து படம் இயக்கம் முடிவு செய்துள்ளேன் எனவும் தெரிவித்தார்.

இதற்கான கதையோடு கமலிடமும், அஜித்திடமும் மற்றும் சூர்யாவிடம் பேசி கண்டிப்பாக நல்ல செய்தியோடு இப்படத்தை வெற்றி அடைய செய்து விரைவில் யுனிவர்ஸ் பார்க்கும் விதமாய் மாறப்போகிறேன் எனவும் தன் நம்பிக்கையை முன்வைத்து வருகிறார். இவரின் இத்தகைய ஆர்வம் கண்டிப்பாக தமிழ் சினிமாவை அடுத்த கட்டத்திற்கு கொண்டு செல்வது உறுதி. மேலும் லோகேஷ் யுனிவர்ஸ் உடைய வாய்ப்பிருப்பதாக கூறப்படுகிறது.

Also Read: 43 வருடத்திற்கு முன் உருவான விரோதம், படாத பாடுபடும் பாரதிராஜா.. கர்வமாய் திரியும் ஜாம்பவான்கள்

Trending News