தமிழ் சினிமாவில் வெற்றிகரமான கமர்ஷியல் இயக்குனர் என்று பெயர் எடுத்தவர் கேஎஸ் ரவிக்குமார். அன்றைய காலத்தில் முன்னணி நடிகர்களாக இருந்த ரஜினி, கமல் ஆகியோருக்கு பல வெற்றிப் படங்களை கொடுத்துள்ளார்.
இப்போதும் ரஜினி கமல் ஆகிய இருவரும் தொடர்ந்து பெரிய பட்ஜெட் படங்களில் நடித்துக் கொண்டிருக்கின்றனர். ஆனால் கேஎஸ் ரவிக்குமார் சமீபகாலமாக படம் இயக்குவதை நிறுத்திவிட்டு குணச்சித்திர கதாபாத்திரங்களில் நடித்து வருகிறார்.
அந்தவகையில் அடுத்ததாக கேஎஸ் ரவிக்குமார் நீண்ட நாட்களுக்கு பிறகு ஒரு ஹீரோ போன்ற கதாபாத்திரத்தில் நடிக்க இருக்கும் திரைப்படம் கூகுள் குட்டப்பன். மலையாளத்தில் ஆண்ட்ராய்டு குஞ்சப்பன் என்ற பெயரில் சூப்பர் ஹிட்டடித்த படத்தின் தமிழ் ரீமேக்கில் நடிக்க உள்ளார்.
இந்த படத்தின் பூஜை சமீபத்தில் நடைபெற்றது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் அந்த பூஜையில் பத்திரிக்கையாளர்கள் பல்வேறு விதமான கேள்விகளை கேட்டனர். அதில் தான் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்துடன் ராணா படத்தை இயக்குவதற்கான வாய்ப்புகள் கிடைக்கும் என்பதைப் போல கூறியிருந்தார்.
தற்போது அதே பேட்டியில் உலகநாயகன் கமலஹாசன் நடிப்பில் ஏற்கனவே வெளியாகி சூப்பர் டூப்பர் ஹிட்டடித்த பஞ்சதந்திரம் படத்தின் இரண்டாம் பாகம் உருவாக அதிக வாய்ப்பு இருப்பதாக குறிப்பிட்டுள்ளார். பொதுவாக இரண்டாம் பாகம் எடுப்பதில் தனக்கு ஆர்வமில்லை எனவும், ஆனால் தற்போது எழுதியிருக்கும் அந்த கதை பஞ்சதந்திரம் 2 டைட்டிலை வைக்க சரியான கதை எனவும் தெரிவித்துள்ளார்.
இது சம்பந்தமாக விரைவில் கமலுடன் பேச இருப்பதாகவும் கேஎஸ் ரவிக்குமார் அந்த பேட்டியில் தெரிவித்துள்ளார். கண்டிப்பாக ஒரு ஜாலியான கலகலப்பான ஃபேமிலி என்டர்டெய்ன்மெண்ட் படம் வருவது கன்பார்ம் என்கிறார்கள் கோலிவுட் வாசிகள்.