ஞாயிற்றுக்கிழமை, டிசம்பர் 22, 2024

யோசிக்க முடியாத கூட்டணி.. அடுத்த ப்ராஜெக்ட்டுக்கு தயாராகும் கமல், ராஜமௌலி

விக்ரம் திரைப்படத்திற்கு பிறகு கமல் தற்போது முழு நேரமும் சினிமாவில் கவனம் செலுத்த தொடங்கி விட்டார். அரசியல் கட்சி ஆரம்பித்ததில் இருந்தே நடிப்பில் அதிகம் கவனம் செலுத்தாமல் இருந்த கமல் தற்போது பயங்கர சுறுசுறுப்புடன் களமிறங்கியுள்ளார். நடிப்பு மட்டுமல்லாமல் தயாரிப்பதிலும் ஆர்வம் காட்டி வரும் அவர் இளம் நடிகர்களை வைத்து படம் தயாரிக்க பேச்சுவார்த்தை நடத்திக் கொண்டிருக்கிறார்.

இந்நிலையில் சில வாரங்களுக்கு முன்பு கமல், மணிரத்தினம் இயக்கத்தில் நடிக்க இருப்பதாக அதிகாரப்பூர்வமான அறிவிப்பு வெளியானது. மணிரத்தினம், ரஜினி கூட்டணி தான் அமையும் என்று எதிர்பார்த்த ரசிகர்களுக்கு இந்த செய்தி இன்ப அதிர்ச்சியாக இருந்தது. அதை தொடர்ந்து தற்போது இன்னொரு சர்ப்ரைஸும் வர இருக்கிறது.

Also read: 16 வயதினிலே படத்தில் ரஜினி வாங்கிய சம்பளம்.. கடைசி வரை ஏமாற்றிய பாரதிராஜா

அதாவது தெலுங்கு திரை உலகின் பிரம்மாண்ட இயக்குனராக இருக்கும் ராஜமவுலி பாகுபலி, ஆர்ஆர்ஆர் போன்ற படங்களின் மூலம் உலக அளவில் கவனம் ஈர்த்தார். தமிழில் கூட அவருக்கு ஏராளமான ரசிகர்கள் இருக்கின்றனர். அதனால் அவர் தமிழ் ஹீரோக்களை வைத்து படம் இயக்க வேண்டும் என்ற கோரிக்கையும் எழுந்தது.

தற்போது ரசிகர்களின் கோரிக்கை நிறைவேற போகிறது. அதாவது கமல் மற்றும் ராஜமவுலி இருவரும் தற்போது ஒரு விழாவில் சந்தித்து பேசி இருக்கின்றனர். அந்த விழாவில் இவர்களுடன் பல முக்கிய பிரபலங்களும் கலந்து கொண்டனர். அந்த வகையில் கௌதம் வாசுதேவ் மேனன், லோகேஷ் கனகராஜ், பிரித்விராஜ் ஆகியோர் அந்த விழாவில் கலந்து கொண்டனர்.

Also read: கமலின் சூப்பர் ஹிட் படத்தை இயக்க மறுத்த பாலச்சந்தர்.. பிரிவியூ ஷோ பார்த்துட்டு இளையராஜா விட்ட சபதம்

அப்போது அவர்கள் பல விஷயங்கள் குறித்தும் பேசி இருக்கின்றனர். அதிலும் கமல், ராஜமவுலி இருவரும் இணைந்து பணி புரிவது குறித்தும் ஆலோசித்து இருக்கின்றனர். தற்போது ராஜமௌலி மகேஷ் பாபுவை வைத்து ஒரு திரைப்படத்தை இயக்க இயலுகிறார். கமலும் மணிரத்தினத்தின் படம், விக்ரம் படத்தின் அடுத்த பாகம் என பிஸியாகி இருக்கிறார்.

அதனால் இவர்கள் இருவரும் தங்கள் ப்ராஜெக்ட்டுகளை முடித்துவிட்டு இணைய உள்ளனர். இது நிச்சயம் யாரும் யோசிக்க முடியாத ஒரு கூட்டணி தான். அந்த வகையில் இரு பெரும் ஜாம்பவான்கள் இணைய போகும் அந்த திரைப்படம் உலக அளவில் மிகப்பெரிய ஹிட் அடிக்கும் என்பதில் சந்தேகம் இல்லை. தற்போது அவர்கள் இணைந்து எடுத்துக் கொண்ட அந்த போட்டோ சோசியல் மீடியாவில் ட்ரெண்டாகி வருகிறது.

Also read: கமல்ஹாசனின் கலக்கல் காமெடியில் உருவான 5 சூப்பர் ஹிட் படங்கள்.. வயிறு குறுங்க சிரிக்க வைத்த அவ்வை சண்முகி

Trending News