வியாழக்கிழமை, ஜனவரி 23, 2025

சென்டிமென்ட்டா வெற்றி பாதைக்கு ரூட் போட்ட கமல்.. அமரன்னு பெயர் வைக்க இதுதான் காரணம்

Kamal and Rajkumar Periyasamy SK 21 is the reason for naming the title Amaran: அச்சமில்லை அச்சமில்லை அச்சமென்பதில்லையே என்ற தீப்பொறிக்கும் வரிகளுடன் வெளியான அமரன் படத்தின் டீசர், ரசிகர்கள் அனைவருக்கும் கூஸ்பம்பை ஏற்படுத்திய தருணமாக அமைந்தது. முழுக்க முழுக்க ஆக்சன்களுடன் பக்கா திரில்லர் ஆக ரசிகர்களை எமோஷனலாக அட்டாக் பண்ண வருகிறது அமரன்.

ராஜ்கமல் ஃபிலிஸ் தயாரிப்பில் ராஜ்குமார் பெரியசாமி இயக்கத்தில் சிவகார்த்திகேயன் மற்றும் சாய் பல்லவி நடிப்பில் உருவாகி வரும் SK 21 படத்தின் டீசர் சமீபத்தில் சிவகார்த்திகேயனின் பிறந்தநாள் அன்று வெளியாகி ரசிகர்களை மகிழ்ச்சி கடலில் ஆழ்த்தியது. இதுவரை கண்டிராத அளவு முற்றிலுமாக காமெடியை தவிர்த்து ஒரு எமோஷனலான ஸ்கிரீன் ப்ளேயில் சிவகார்த்திகேயன் வருவது போல உள்ளது.

அமரன் பெயரை கேட்ட உடனே நவரச நாயகன் கார்த்தி நடிப்பில் வெளியான அமரன் படத்தின் பெயரும் பாடலும் தான் நினைவுக்கு வந்தது. இந்த பெயரை வைப்பதற்கு என்ன ஸ்பெஷல்?  அதுமட்டுமில்லாமல் 1992 ஆண்டு வெளிவந்த அமரன்  ரசிகர்களின் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்யாது தோல்வியை தழுவியது. தோல்வியான படத்தின் டைட்டிலை வைக்க என்ன காரணம்?

Also read: ரகசியமாய் அடிக்கடி அமெரிக்கா செல்லும் கமல்.. காஸ்டியூம் டிசைனருடன் இப்படி ஒரு கூட்டணியா?

இதேபோல் கடந்த 2022 ல் வெளிவந்த லோகேஷ் மற்றும் கமலின் விக்ரம், பழைய விக்ரம்  அடைந்த தோல்வியை சரி கட்டி பல மடங்கு லாபத்தை சம்பாதித்து வெற்றியே ருசித்தது. அதேபோல் இதுவும் முதலில் தோல்வியோடு விடை பெற்று இருந்தாலும் தற்போது வரும் அமரன் பிளாக் பஸ்டர் ஹிட் அடிக்கும் என்ற நோக்கத்திலேயே கமல், சென்டிமென்டாக இந்த படத்தின் தலைப்பு அமரனுக்கு ஓகே சொன்னாரோ என்னவோ?

அமரன் பட தலைப்பு பற்றி இயக்குனர் ராஜ்குமார் பெரியசாமியிடம் கேட்டபோது, ராணுவ வீரர் முகுந்த் வரதராஜனின் உண்மை சம்பவத்தை அடிப்படையாகக் கொண்ட திரைப்படம் ஆதலால் கதையை யோசிக்கும் போதே அமரன் அதாவது “அழிவில்லாதவன்” என்ற முதல் வார்த்தையுடன் தான் திரைக்கதை எழுதினேன் என்று சென்டிமெண்டாக கூறியுள்ளார்.

நாட்டுக்காக உயிர் தியாகம் செய்த அமரனான முகுந்தின் வீரதீர செயலை  சில காட்சிகளிலேயே நாம் கண்முன் நிறுத்தியுள்ளார் சிவகார்த்திகேயன். புதிய பரிமாணத்துடன் ரசிகர்களின் இதயத்துடிப்பை அதிகரிக்க வரும் அமரனுக்கு வாழ்த்துக்கள்.

Also read: சிவகார்த்திகேயன் கிரீன் சிக்னல் காட்டியும் 3 வருஷத்துக்கு பின் டேக்ஆப் ஆன பிளைட்.. ரஜினிகிட்ட போய் வந்தும் கிடப்பில் போட்டது

Trending News