பொன்னியின் செல்வனுக்கு பிறகு மீண்டும் எழ முடியாத சூழலில் சிக்கிக் கொண்டது லைகா. ஒரு காலத்தில் தொடர் வெற்றிகள் கொடுத்த லைக்கா நிறுவனம் இப்பொழுது அதல பாதாளத்தில் தொங்கிக் கொண்டிருக்கிறது. இதற்கு அவர்கள் வைத்த அகலக்கால் தான் காரணம்.
லால் சலாம், சந்திரமுகி 2, வேட்டையன், இந்தியன் 2 ஏன் சமீபத்தில் வெளிவந்த விடாமுயற்சி கூட நல்ல லாபத்தை கொடுக்கவில்லை. இந்த ஐந்து படங்களையும் நம்பி லைகா மொத்த சொத்துக்களையும் இழந்துவிட்டது. இதனால் அடுத்தடுத்த பிரச்சனைகளில் சிக்கிக் கொண்டது..
பெரிதும் நஷ்டம் ஏற்படுத்திய இந்தியன் 2 படத்திற்கு பின்னர் விடாமுயற்சி படத்தை வைத்து சம்பாதித்து விடலாம் என எண்ணிய அவர்களுக்கு அந்த படமும் கை கொடுக்கவில்லை. இதனால் அடுத்து தயாரித்துக் கொண்டிருக்கும் எம்பிரான் மற்றும் இந்தியன் 3 படங்களுக்கு சிக்கல் ஏற்பட்டுள்ளது.
மோகன்லாலை வைத்து பிரித்திவிராஜ் இயக்கி வரும் படம் எம்பிரான். இது லூசிபர் படத்தின் இரண்டாம் பாகம் என கூறுகிறார்கள். இந்த படமும் பட்ஜெட் பற்றாக்குறையில் தவித்து வருகிறது. மோகன்லால் மற்றும் பிரித்விராஜ் இருவரும் தங்களது சம்பளத்தை விட்டுக் கொடுத்துள்ளனர்.
இதுபோக இந்தியன் 3 படத்திற்கு ஷங்கர் மற்றும் கமல் இருவருக்கும் ஒரு பெரும் தொகையை சம்பளமாக லைககா கொடுக்க வேண்டியிருக்கிறது. இந்த பண பிரச்சனைகளை எல்லாம் சமாளித்த பிறகு தான் இந்தியன் 3 படத்திற்கு கிரீன் சிக்னல் கிடைக்கும். தற்சமயம் இடியாப்ப சிக்கலில் தவித்து வருகிறது லைகா.