திங்கட்கிழமை, டிசம்பர் 23, 2024

உறுதியான கமல், வினோத் காம்போ.. அதற்குள் பட்டா போட்டு புக் செய்த நெட்பிளிக்ஸ்

Kamal, Vinoth: கமல் தற்போது வினோத் படத்தில் நடிக்க உள்ள அறிவிப்பு சமீபத்தில் வெளியானது. விக்ரம் படத்தின் வெற்றிக்கு பிறகு ஷங்கர் இயக்கத்தில் இந்தியன் 2 படத்தில் கமல் நடித்து வருகிறார். இந்த படத்தின் படப்பிடிப்பு கிட்டத்தட்ட முடியும் தருவாயில் இருக்கிறது. அடுத்த ஆண்டு பொங்கல் பண்டிகை அல்லது ஏப்ரல் மாதத்தில் வெளியிட படக்குழு முடிவு செய்திருக்கிறது.

ஒரு பக்கம் இளம் நடிகர்களை வளைத்து போட்டு தனது ராஜ்கமல் நிறுவனத்தின் மூலம் படங்களை தயாரித்து வருகிறார். மற்றொருபுறம் நடிப்பிலும் தீவிரமாக செயல்பட இருக்கிறார். அந்த வகையில் மணிரத்தினம் படத்திற்கு முன்னதாகவே எச் வினோத் படத்தின் படப்பிடிப்பது தொடங்க உள்ளது.

Also Read : சந்தில் சிந்து பாடிய சிவகார்த்திகேயன்.. பிசினஸ் வேற, நட்பு வேறன்னு மறுத்த கமல்

இப்படம் சமூகத்தின் மீது அக்கறை கொண்டு எடுக்கப்படும் படமாக இருக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. அதன்படி தமிழர்களின் வாழ்வாதாரமான விவசாயத்தை மையமாக வைத்து தான் இந்த படம் உருவாகிறது. இதில் நம்மாழ்வார் கதாபாத்திரத்தில் கமல் நடிக்க உள்ளார் என்ற செய்தி வெளியாகியிருக்கிறது.

அதோடு மட்டுமல்லாமல் இப்படத்தில் விஜய் சேதுபதியும் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க உள்ளாராம். இந்நிலையில் படங்கள் எடுத்த பின்பு தான் ஓடிடியில் டிஜிட்டல் உரிமைக்கு விற்கப்படும். ஆனால் இப்போது வினோத் மற்றும் கமல் கூட்டணியின் அறிவிப்பு மட்டும்தான் வெளியாகி இருக்கிறது.

Also Read : கிளாமர் ரோலினால் நாசமாய் போன 5 நடிகைகளின் வாழ்க்கை.. கமல் ஹீரோயினுக்கு வந்த நோய்

அதற்குள் நெட்பிளிக்ஸ் முந்தியடித்துக் கொண்டு அட்வான்ஸ் புக்கிங் செய்திருக்கிறது. அதாவது இந்த படத்தின் டிஜிட்டல் உரிமையை இப்போது 125 கோடிக்கு வாங்கி இருக்கிறதாம். மற்ற ஓடிடி நிறுவனங்கள் இப்படத்தை கைப்பற்றி விடக்கூடாது என்பதற்காக சூதானமாக முன்கூட்டியே பட்டா போட்டு வாங்கிவிட்டது.

ஏனென்றால் வினோத்தின் முந்தைய படமான துணிவு படமும் ரசிகர்கள் மத்தியில் ஏகோபித்த வரவேற்பை பெற்றிருந்தது. அதேபோல் கமலின் விக்ரம் படத்தை சொல்லவே வேண்டாம் இண்டஸ்ட்ரியல் ஹிட் அடித்தது. ஆகையால் முதல்முறையாக வினோத், கமல் காம்போ இணைந்துள்ளதால் எதிர்பார்ப்பு சற்று அதிகமாக தான் இருக்கிறது.

Also Read : நீங்கதான் வேணும், கமல் அடம் பிடித்துக் கூப்பிட்ட நடிகர்.. இந்தியன் 2வில் விவேக்கிற்கு பதில் இவர்தான்

Trending News