வியாழக்கிழமை, ஜனவரி 23, 2025

கமல், மணிரத்தினத்தை காப்பி அடித்த விஷால்.. கடைசியில் அசிங்கப்பட்டது தான் மிச்சம்

விஷால் கடந்த சில மாதங்களாகவே ஏகப்பட்ட சர்ச்சைகளில் சிக்கி வருகிறார். படப்பிடிப்புக்கு ஒழுங்காக வராமல் இருப்பது, கால்ஷூட் சொதப்பல் என அவர் மீது புகார்கள் அடுக்கடுக்காக வந்து கொண்டே இருந்தது. அது மட்டுமல்லாமல் அவர் லத்தி படப்பிடிப்பில் சரிவர கலந்து கொள்ளாமல் இஷ்டத்திற்கு நடித்து கொடுத்ததால்தான் அப்படம் மிகவும் காலதாமதம் ஆகி இப்போது ஒரு வழியாக ரிலீஸ் ஆகி இருக்கிறது.

ஆனால் அந்தப் படம் ட்ரைலர் வெளியான போதே பெரிய அளவில் எதிர்பார்ப்பை எல்லாம் ஏற்படுத்தவில்லை. ஆனாலும் விஷால் அந்த படத்திற்கு விழுந்து விழுந்து புரமோஷன் செய்தார். ஆரம்பத்தில் அந்த படத்தை கண்டு கொள்ளாமல் இருந்துவிட்டு ரிலீஸ் ஆகிற சில நாட்களுக்கு முன்பு படம் வெற்றியடைய வேண்டும் என ஓவராக அலப்பறை கொடுத்து வந்தார்.

Also read: சுழட்டி அடிக்கப்பட்ட லத்தி.. முதல் நாள் வசூலில் மண்ணை கவ்விய விஷால்

ஆனாலும் அவருடைய ராஜதந்திரங்கள் அனைத்தும் வீணா போனது தான் மிச்சம். கமல் மற்றும் மணிரத்னம் இருவரும் தங்கள் படத்தை மிகப்பெரிய அளவில் ப்ரமோஷன் செய்தனர். அதற்கேற்றார் போல் அவர்களுக்கு வெற்றியும் கிடைத்தது. அதே அளவுக்கு நானும் பிரமோஷன் செய்கிறேன் என்ற பெயரில் விஷாலும் படத்தை விளம்பரப்படுத்த என்னென்னவோ செய்து பார்த்தார்.

ஆனாலும் படத்தைப் பார்த்த அனைவரும் நல்லா இல்லை என்று சொன்னால் கூட பரவாயில்லை படம் குப்பை என்று கூறிவிட்டனர். மேலும் படத்திற்கு அவர் ஒருவர் மட்டும் ப்ரமோஷன் செய்தால் படம் ஓடிவிடுமா என்ற விமர்சனமும் தற்போது எழுந்துள்ளது. இவரை போல தான் நயன்தாராவும் கனெக்ட் படம் வெளி வருவதற்கு இரு நாட்களுக்கு முன்பு பிரமோஷன் செய்தார்.

Also read: அத்தனையும் நடிப்பு, உள்ளுக்குள்ள அம்புட்டு ஆசை.. உடைந்து போன விஷால் போடும் வெளி வேஷம்

பொதுவாகவே அவர் எந்த படத்திற்கும் ப்ரோமோஷன் செய்ய மாட்டார். அதுவே தன்னுடைய தயாரிப்பு படம் என்றால் மட்டும் களத்தில் குதித்து விடுவார். இது ஒரு சில படங்களுக்கு ஒர்க் அவுட் ஆனாலும் இந்த படத்திற்கு செட்டாகவில்லை. அதனாலேயே இந்த படம் இப்போது வசூலில் சோடை போயிருக்கிறது. இதை பார்த்த ரசிகர்கள் படத்தில் கதை இருந்தால் தான் ஓடும்.

அதை விட்டுவிட்டு பிரமோசனை மட்டும் நம்பினால் இப்படித்தான் மூக்கு உடைந்து போக வேண்டும் என கூறி வருகின்றனர். அந்த வகையில் இந்த இரண்டு படங்களும் இப்போது பெரும் நஷ்டத்தை சந்தித்துள்ளது. மேலும் படத்தின் கதையும் ஆடியன்ஸுக்கு பிடிக்கவில்லை. இனிமேலாவது இது போன்ற ப்ரமோஷனை நம்பாமல் அவர்கள் கதையில் கொஞ்சம் கவனம் செலுத்த வேண்டும் என்பதுதான் பலரின் கருத்து.

Also read: கல்லா கட்டாத கனெக்ட்.. அடுத்தவன் போட்ட காசுக்கு அக்கறைப்படாத நயன், இறங்கி செய்த செயல்

Trending News