தமிழ் சினிமாவில் காதல் கிசுகிசுக்களில் வயது கடந்தும் அதிகம் இடம் பெறுவது கமலஹாசன் தான். அந்தக்காலம் முதல் இந்தக்காலம் வரை நடிகைகளின் பெயரை எடுத்தாலே கமல் பெயர் வராமல் இருப்பதில்லை.
மனுஷனுக்கு தற்போது 60 வயதுக்கு மேல் ஆகிறது. இருந்தாலும் நடிகைகள் விஷயத்தில் அவர் பெயர் கிசுகிசுக்கப்படுவது குறைந்தபாடில்லை. அந்தவகையில் ஆண்ட்ரியாவுடன் சிலகாலம் ரகசிய உறவு வைத்திருந்ததாக பிரபல பத்திரிக்கையாளர் பயில்வான் ரங்கநாதன் சமீபத்திய பேட்டியில் தெரிவித்துள்ளார்.
அந்தப் பேட்டியை தொடங்கும்போதே அனைத்தும் ஆதாரத்துடன் தான் சொல்கிறேன் எனவும் எதுவும் வதந்தி இல்லை எனவும் தெரிவித்தார். அதனைத் தொடர்ந்து கமல்ஹாசன் மற்றும் ஆண்ட்ரியா இருவரும் சில வருடங்கள் ரகசிய உறவில் இருந்தார்களாம்.
அதன் காரணமாகத்தான் தொடர்ந்து கமல்ஹாசன் தன்னுடைய படங்களில் ஆண்ட்ரியாவுக்கு வாய்ப்பு கொடுத்து வருவதாகவும் கூறியுள்ளார். மேலும் கமலஹாசன் யாரையும் வற்புறுத்தி ரகசிய உறவு வைத்துக்கொள்ள மாட்டாராம்.
கமல் மீது உள்ள ஒருவிதமான ஆசையால் தானாகவே நடிகைகள் வந்துவிடுவார்கள், அது அவரது தவறும் இல்லை எனக்கூறி சர்ச்சைக்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையில் தெரிவித்துள்ளார் பயில்வான் ரங்கநாதன்.
கடந்த சில மாதங்களாக சினிமாவில் நடிக்கும் நடிகர் நடிகைகள் பிரபலமாக இருக்கிறார்களோ இல்லையோ கிசுகிசு விஷயத்தில் பயில்வான் ரங்கநாதன் பெயர் பட்டி தொட்டி எங்கும் ஒலித்துக் கொண்டிருக்கிறது என்பது மறுக்க முடியாது.
