திங்கட்கிழமை, டிசம்பர் 23, 2024

Kamal : நம்ப வைத்து துரோகம் செய்த கமல்.. திருப்பதி கல்லாவை காலி செய்ய வைத்த ஆண்டவர்

கமலஹாசனால் தயாரிப்பாளர்கள் மிகுந்த நஷ்டம் அடைவதாக பிரபலம் ஒருவர் அதிர்ச்சியை கிளப்பி இருக்கிறார். அதாவது கமல் தன்னுடைய படங்களின் கதைகளில் இயக்குனர் மற்றும் தயாரிப்பாளருக்கு சுதந்திரம் கொடுக்க மாட்டார் என்ற விமர்சனம் எப்போதுமே வைக்கப்பட்டு உள்ளது.

இதனால் கமலின் நிறைய படங்கள் தோல்வியடைந்தது தயாரிப்பாளருக்கு நஷ்டம் ஏற்பட்டதாகவும் விமர்சனங்கள் வருகிறது. இந்நிலையில் ஜர்னலிஸ்ட் ராமானுஜம் கொடுத்த பேட்டி தான் இப்போது பரபரப்பாக போய்க்கொண்டிருக்கிறது.

அதாவது கமல் பல தயாரிப்பாளர்களை நம்ப வைத்து துரோகம் செய்திருக்கிறார் என்று கூறியுள்ளார். கலைப்புலி எஸ் தாணு தனது மனைவியை இழந்த சோகத்தில் இருந்த போதும் கமலின் ஆளவந்தான் படத்தை தயாரித்தார். இந்தப் படத்தால் அவருக்கு மிகப்பெரிய நஷ்டம் ஏற்பட்டது.

இதனால் மீள முடியாத கடனில் தள்ளப்பட்ட தாணுக்கு கமல் தரப்பிலிருந்து எந்த உதவியும் வரவில்லை என்று ராமானுஜம் கூறியிருக்கிறார். இதனால் கலைப்புலி தாணுவே ஆளவந்தான் என்னை அழிக்க வந்தான் என்று பேட்டி கொடுத்ததாக குறிப்பிட்டிருந்தார்.

கமலால் நஷ்டத்தை சந்தித்த திருப்பதி பிரதர்ஸ்

அதேபோல் நிலைமை லிங்குசாமியின் திருப்பதி பிரதர்ஸ் படத்திற்கும் ஏற்பட்டது. ஆரம்பத்தில் மலையாளத்தில் வெளியான த்ரிஷ்யம் படத்தை திருப்பதி பிரதர்ஸ் எடுக்க ஆர்வம் காட்டியுள்ளனர். இதை கமலிடம் கூறிய போது மறுத்து விட்டார்.

ஆனால் அதன் பிறகு த்ரிஷ்யம் படத்தை வேறு தயாரிப்பு நிறுவனத்திற்கு கமல் நடித்துக் கொடுத்தார். மேலும் ரமேஷ் அரவிந்த் இயக்கத்தில் கமல் நடிப்பில் உருவான உத்தம வில்லன் படத்தை லிங்குசாமி தான் தயாரித்திருந்தார்.

இந்த படத்தில் தயாரிப்பு நிறுவனம் சொன்ன கதையில் கமல் நடிக்காமல் உத்தம வில்லன் கதையில் நடித்தார். இதனால் படம் மிகப்பெரிய தோல்வி அடைந்து விட்டது. இந்த படத்தின் வெளிநாட்டு உரிமையை கமல் பெற்றிருந்தார். மேலும் தமிழ்நாட்டில் படம் வெளியாவதில் பிரச்சனை ஏற்பட்ட நிலையில் வெளிநாட்டில் கமல் படத்தை ரிலீஸ் செய்து விட்டார்.

உத்தம வில்லன் படத்தின் நஷ்டத்தை ஈடுகட்ட கமல் திருப்பதி பிரத்ஸ்க்கு வேறு ஒரு படத்தில் நடித்துக் கொடுக்க வேண்டும் என புகார் மனுவில் கூறப்பட்டிருந்தது. ஒன்பது வருடம் ஆகியும் திருப்பதி பிரதர்ஸுக்கு தற்போது வரை கமல் வேறு படத்தில் நடித்துக் கொடுக்கவில்லை. இவ்வாறு திருப்பதி பிரதர்ஸின் கல்லாவை காலி செய்தார் கமல் என பத்திரிக்கையாளர் ராமானுஜம் கூறியிருக்கிறார்.

Trending News