வியாழக்கிழமை, ஜனவரி 23, 2025

என்னது அந்த படம் காப்பியா.! உண்மையை ஓப்பனாக போட்டு உடைத்த கமல்

Actor Kamal: உலகநாயகன் படங்கள் என்றாலே அதில் ஒரு தனித்துவம் இருக்கும். நமக்கு தெரியாத பல விஷயங்கள் மட்டுமல்லாமல் புது தொழில்நுட்பங்களையும் புகுத்துவதில் அவர் கில்லாடி தான். அப்படிப்பட்டவரின் ஒரு படம் காப்பி என்று அவரே போட்டு உடைத்திருக்கிறார்.

ஒருமுறை பிரஸ் மீட்டில் அவர் கலந்து கொண்ட போது அவரிடம் பல கேள்விகள் கேட்கப்பட்டது. அதில் முக்கியமாக தேவர் மகன் படத்தை பற்றிய கேள்வியை பத்திரிகையாளர் கேட்டிருக்கிறார். அதாவது உங்களுடைய தேவர்மகன் படத்தை தவிர மற்ற படங்கள் எல்லாம் ஏதாவது ஒரு படத்தின் தழுவலாக இருக்கிறதே ஏன் என்ற கேள்வியை எழுப்பி இருக்கிறார்.

அதற்கு கமல் கூறிய பதில் தான் ஆச்சரியத்தை ஏற்படுத்தியிருக்கிறது. அதாவது என்னுடைய தேவர் மகன் படமும் ஒரு நாவலை தழுவி எடுக்கப்பட்டது தான் என்று அவர் தெரிவித்திருக்கிறார். அதற்கான ஒரு விளக்கத்தையும் அவர் தெரிவித்துள்ளார்.

Also read: ஆண்டவரையே கதற விட்ட பசுக்கள் கூட்டம்.. ஜிங்ஜாங் போடும் காளைகள், சுவாரசியமாகும் சீசன் 7

அதன்படி எனக்கு தெரிந்த பல விஷயங்கள் மற்றும் நான் படித்தவை என் மக்களுக்கும் தெரிய வேண்டும். அதனால் இதில் என்ன தவறு இருக்கிறது என்று தைரியமாக சொன்னாராம். உண்மையில் இப்படி ஒரு பதிலை எந்த ஒரு உச்ச நடிகரும் கூறி இருக்க மாட்டார்.

காப்பி படமாக இருந்தால் கூட மழுப்பலான பதிலை தான் கூறுவார்கள். ஆனால் கமல் அதை வெளிப்படையாக கூறியது மட்டுமல்லாமல் அட்டகாசமான விளக்கத்தையும் தந்திருக்கிறார். பொதுவாகவே அவருக்கு புத்தகங்கள் வாசிப்பதில் அலாதி பிரியம் உண்டு.

பிக்பாஸ் நிகழ்ச்சியில் கூட அவர் நமக்கு தெரியாத பல புத்தகங்களை பற்றி கூறியிருக்கிறார். அந்த வகையில் தேவர் மகனும் ஒரு நாவலின் சாயல் என்பது தற்போது பலருக்கும் புதிய தகவலாக இருக்கிறது. அந்த வகையில் தற்போது மணிரத்னத்துடன் அவர் இணைந்துள்ள தக் லைஃப் படமும் இப்படி ஒரு பின்னணியை கொண்டு இருக்கலாம் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

Also read: விஜய் டிவி காலில் விழுந்து ஹோஸ்ட் ஆன கமல்.. எக்ஸ்பயரி முடிஞ்ச தாத்தா என அசிங்கப்படுத்திய பிக்பாஸ் பெண் சைக்கோ

Trending News