ஞாயிற்றுக்கிழமை, ஜனவரி 12, 2025

அஜித் பட இயக்குனருக்கு போன் போட்ட ஆண்டவர்.. கமலின் இன்னொரு முகம் இதுதான்!

குறும்பு படம் மூலம் இயக்குனராக அறிமுகமாகியிருந்தாலும் அறிந்தும் அறியாமலும் படம் மூலம் இயக்குனராக கவனிக்கப்பட்டவர் விஷ்ணுவர்தன். இப்படத்தை அடுத்து, பட்டியல், பில்லா, சர்வம், ஆரம்பம் , பட்சம் ஆகிய படங்களை இயக்கினார்.

இப்படத்தை அடுத்து, கார்கில் போரில் வீரமரணம் அடைந்த விக்ரம் பத்ராவின் வாழ்க்கையை வரலாற்றுப் படத்தை பாலிவுட்டில் ஷெர்ஷா என்ற பெயரில் இயக்கினார் விஷ்ணுவர்தன். இப்படத்தில், சித்தார்த் மல்ஹோத்ரா, கியாரா அத்வானி உள்ளிட்டோர் நடித்திருந்தனர்.

இப்படத்திற்கு சந்தீப் ஸ்ரீவஸ்திரா கதை எழுதியிருந்தார். கமல்ஜீத் பிரசாத் ஒளிப்பதிவு செய்ய, ஜான் ஸ்டீவர்ட் எடுரி இசையமைத்திருந்தார். கடந்த 2021 ஆம் ஆண்டு, ஆகஸ்ட் 12 ஆம் தேதி இப்படம் ரிலீசாகி பெரும் வரவேற்பை பெற்று, வசூல் குவித்தது.

இந்த நிலையில், சமீபத்தில் ஒரு பேட்டியில் தான் இயக்கிய ஷெர்ஷா படம் குறித்து தனது அனுபவத்தை அவர் பகிர்ந்து கொண்டார். அப்போது, கமல்ஹாசன் இப்படத்தைப் பார்த்துவிட்டு பாராட்டியதாகத் தெரிவித்துள்ளார்.

கமல் பற்றி விஷ்ணுவர்தன் கூறியதாவது;

“இப்படம் என் ரொம்ப வித்தியாசமான படம், எமோசனலான படம். அதுதான் விக்ரம் பத்ராவின் கதை. ஒன்று முகுந்த் ஸ்டோரி. இவர்கள் இருவரின் ஸ்டோர், எனக்கு நன்றாக நியாபகம் உள்ளது. நான் பொதுவாக பிரஸ், மக்களை மீட் பண்ணுவதில்லை. நான் படமெடுத்துவிட்டு அமைதியாக இருந்துவிடுவேன். எதற்கும் நான் வருந்துவதில்லை. எனக்கு ஃபேஸ்புக், இன்ஸ்டா, டுவிட்டர் அக்கவுண்டர்கள் இல்லை. ஆனால் நான் சந்தோசமாக இருக்கிறேன். அதெல்லாம் ஃபேக் அக்கவுண்ட்ஸ்.

இப்படம் பார்த்துவிட்டு, கமல் சார் எனக்கு போன் செய்தார். ஏனென்றால் அவர் இப்படத்தில் என் பெயர் பார்த்துவிட்டு இது நம்ம விஷ்ணுவர்தனா என்று யோசித்து எனக்கு அழைத்தார். அமரம் படம் எடுத்து முடித்தவுடன் எனக்கு போன் செய்து, இப்படத்தைப் பார்க்க வேண்டும் என்றார். அப்படம் ரிலீஸாகி விட்டது, அது மற்றோரு ஹீரோவின் கதை. மக்கள் அந்த ஹீரோக்கள் யார் என்று தெரிந்துகொள்ள வேண்டும்” என்று தெரிவித்துள்ளார்.

மேலும், மற்றொரு பேட்டியில் “Shershaah’க்கு தேசியவிருது கிடைத்ததை விட மிகப்பெரிய அவார்டு  கமல்ஹாசன் சார் பாராட்டுனது புல்லரித்தது, இப்ப கூட நேர்ல பாத்தேன் நைட் US போறேன் AI டெக்னாலஜி படிக்கன்னு சொன்னாரு அதுதான் எனக்கு இன்ஸ்பிரேஷன் இப்ப நான் பைலட் கோர்ஸ் படிக்க போறேன்” என்று தெரிவித்துள்ளார்.

கமலின் இன்னொரு முகம்!

கமல்ஹாசன் அனைத்து விசயங்களும் தெரிந்தவர் என்றாலும் சினிமாவில், அவர் திறமையான கலைஞர்களை அறிந்து தேடிச் சென்று பாராட்டுவதும், அவர்களை அங்கீகரிப்பதும் இதன் மூலம் தெரியவருகிறது. கமல் கர்வம் பிடித்தவர் என பலரும் கூறிக் கொண்டிருக்கும் போது, கமலின் நிஜமான குணம் அனைவரையும் நேசிக்கும் இந்த குணம் தான். இது யாருக்கும் தெரியாத அவரது இன்னொரு முகம் என நெட்டிசன்கள் பதிவிட்டு அவரைப் பாராட்டி வருகின்றனர்.

Trending News