சனிக்கிழமை, ஜனவரி 11, 2025

நிரம்பி வழியும் கால்ஷீட்.. இரட்டைக் குதிரையில் சவாரி செய்ய கமலின் கைவசம் இருக்கும் 6 படங்கள்

Actor Kamal: உலகநாயகன் இப்போது படு பிஸியாக இருக்கிறார். இந்த வயதில் இப்படி ஒரு எனர்ஜியா என்று பலரும் வியக்கும் வகையில் இருக்கிறது அவருடைய நடவடிக்கை. அந்த வகையில் தற்போது சோசியல் மீடியா முழுவதையும் இவர் ஒருவரே ஆக்கிரமித்துள்ளார். சமீப காலமாக இவர் வெளியிடும் ஒவ்வொரு அறிவிப்பும் மாஸ் காட்டி வருகிறது.

அதன்படி ஆண்டவர் இப்போது நடிப்பு, தயாரிப்பு என இரட்டை குதிரையில் சவாரி செய்ய தயாராகி விட்டார். இதனால் அடுத்த சில வருடங்களுக்கு இவருடைய கால்ஷீட் நிரம்பி வழிகிறதாம். அந்த அளவுக்கு இவர் கைவசம் தற்போது பல படங்கள் இருக்கின்றன. அது என்ன என்பதை பற்றி இங்கு காண்போம்.

Also read: குருநாதா நீங்க இப்படி பண்ணலாமா? ப்ளூ சட்டை போட்ட பதிவால் ஆடிப் போன மாவீரன் தயாரிப்பாளர்

தன்னுடைய ராஜ்கமல் நிறுவனத்தின் மூலம் இளம் ஹீரோக்களை வளைத்துப் போட்டுள்ள ஆண்டவர் இப்போது சிவகார்த்திகேயனின் 21 வது படத்தை தயாரித்து வருகிறார். அதை தொடர்ந்து சிம்புவின் 48 வது படம் பற்றிய அறிவிப்பு சமீபத்தில் வெளிவந்து எதிர்பார்ப்பை கிளப்பியது.

அது மட்டுமல்லாமல் கமல், எச் வினோத் கூட்டணியில் உருவாகும் KH 233 படம் பற்றிய அறிவிப்பும் சில தினங்களுக்கு முன்பு வெளிவந்தது. ஆரவாரமாக வெளியான இந்த அறிவிப்பே மாஸ் காட்டிய நிலையில் படம் யாரும் எதிர்பார்க்காத ஒரு கதையாக இருக்கும் என்ற தகவலும் கமல் ரசிகர்களை கொண்டாட வைத்திருக்கிறது.

Also read: சப்பானி கமலை பார்த்து மிரண்ட 2 நடிகர்கள்.. 22 வயசுலயே உலக நாயகன் அந்தஸ்தை பெற்ற ஆண்டவர்

இதற்கு அடுத்து மணிரத்னம் இயக்கும் KH 234 படத்திலும் கமல் நடிக்க இருக்கிறார். இது குறித்த அறிவிப்பு பல மாதங்களுக்கு முன்பே வெளிவந்துவிட்டது. மேலும் விக்னேஷ் சிவன், பிரதீப் ரங்கநாதன் கூட்டணியில் உருவாகும் ஒரு படத்தையும் ராஜ்கமல் நிறுவனம் தயாரிக்க இருக்கிறது.

அது மட்டும் இன்றி தனுஷ், நெல்சன் கூட்டணியில் உருவாக இருக்கும் ஒரு படத்தையும் இவர் தயாரிக்கிறார். இப்படி அடுத்தடுத்த படங்களை கைவசம் வைத்துள்ள ஆண்டவர் விக்ரம் படத்தின் அடுத்த பாக அறிவிப்பை எப்போது வெளியிடுவார் எனவும் ரசிகர்கள் காத்திருக்கின்றனர். அந்த வகையில் உலக நாயகனின் இந்த அதிரடி மற்ற நடிகர்களுக்கு கொஞ்சம் பயத்தை காட்டி இருக்கிறது.

Also read: நட்புக்காக கேஜிஎஃப் ஹீரோ செய்யும் வேலை.. ரஜினியை கௌரவ படுத்தியவர்களுக்கு யாஷ் செய்த நன்றி கடன்

Trending News