சனிக்கிழமை, டிசம்பர் 21, 2024

கைகொடுத்த கமல்.. H.வினோத் ரூட்டில் பயணிக்கும் விஜய்.. அப்போ ’விஜய்69’ சூப்பர் ஹிட்தான்

தளபதியின் 69 வது படத்தைப் பற்றி நாளொரு மேனி பொழுதொரு வண்ணமாக தகவல்கள் பரவி வரும் நிலையில், இப்படத்தை இதுவரை இல்லாத வகையில் சிறந்த வகையிலும் விஜயின் கேரியலில் பெஸ்ட் படமாக கொண்டு வர ஹெ.வினோத் திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகிறது.

தளபதி அரசியலுக்கு வந்துவிட்டார். சினிமாவில் இருந்து விஜய்69 படத்துடன் அவர் விடைபெறப்போகிறார் என்ற தகவல் வெளியானபோதே, ரசிகர்கள் உடைந்துவிட்டனர். வசூல்கிங் தளபதியின் இடத்தில் வேறு எந்த நடிகரையும் வைத்துப் பார்க்க ரசிகர்களும் விரும்பவில்லை. இந்த நிலையில்தான் விஜயின் 69 பட அறிவிப்பு வெளியானது.

அஜித்தின் நேர்கொண்ட பார்வை, வலிமை, துணிவு என்ற 3 ஹிட் படங்களைக் கொடுத்த ஹெ.வினோத்தான் விஜய் 69 படத்தை இயக்குவதாக அதிகாரப்பூர்வமான கேவிஎன் புரடக்‌ஷன்ஸ் அறிவித்தபோது ரசிகர்கள் மகிழ்சியடைந்தனர். இப்படத்தில் நடிக்கும் நடிகர்களை படக்குழு அறிவித்து வருகிறது. அதன்படி, பூஜா ஹெக்டே, பாபி தியோல் உள்ளிட்டோர் நடிக்கவுள்ளனர்.

நேற்று முன் தினம் இப்படத்திற்கு பூஜை போடப்பட்டு, சென்னையில் இப்படப் பாடலுக்கான ஷூட்டிங் நடைபெற்று வருகிறது. அனிருத் அவரது ஸ்டைலில் சூப்பர் பாடலை கொடுத்துள்ளதாக தெரிகிறது. தளபதியின் கடைசிப் படம் என்ற செண்டிமெண்ட் இருப்பதால், இப்படத்தை யாராலும் மறக்க முடியாத படமாக கொடுக்க ஹெச்.வினோத் & விஜய் கூட்டணி முடிவெடுத்துள்ளது.

ஹெச்.வினோத் ரூட்டில் பயணிக்கும் விஜய்!

அதன்படி, இப்படத்தில் அரசியல் மற்றும் சமூக அக்கறை கொண்ட படமாக உருவாகி வருகிறது. ஹெச்.வினோத்துடன் இணைந்து இப்படத்திற்கு கமல்ஹாசன் திரைக்கதை எழுதியதாகக் கூறப்படுகிறது. ஏற்கனவே விஜய்யை உச்சி முகர்ந்து பேசும் கமல், இப்படத்தில் விஜயை மக்களிடம் கொண்டு சேர்க்கும் ஸ்கிரிப்டை எழுதியுள்ளதாக தெரிகிறது.

மேலும், ஹெச்.வினோத் இயக்கத்தில் கார்த்தி நடிப்பில் வெளியான தீரன் படத்தைப் போன்று இப்படத்திலும் விஜய் நேர்மையான போலீஸ் அதிகாரியாக நடிக்கலாம் எனவும், அவருக்கு அரசியலில் ஏற்படும் அழுத்தங்களுக்கு இடையில் அவர் எப்படி நேர்மையாகப் பணியாற்றினார் என்பது சுவாரஸ்யமான திரைக்கதையில் கூறப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகிறது.

துரங்க வேட்டை படத்தின் டிரைலரை விஜய் தான் புரமோசன் செய்தார். சில ஆண்டுகள் கழித்து அவரை வைத்துப் படமெடுக்கும் அளவு உயர்ந்துள்ள வினோத் நிச்சயம் தனது முந்தையை படங்களைப் போல் இப்படத்தையும் ஹிட்டாக்குவார் என்று ரசிகர்கள் எதிர்பார்த்துள்ளனர். அதே அதேசமயம் இது மாஸ் ஹீரோ விஜய் நடித்தாலும் வினோத் தன் பார்முலாவில்தான் படத்தை எந்தவித சமரசமின்றி எடுக்கவுள்ளதாகவும் கூறப்படுகிறது. ஏற்கனவே வசூலில் பெஞ்ச் மார்க் செட் செய்துள்ள தளபதி தன் கடைசிப் படத்திலும் அதை செய்வார் என ரசிகர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

Trending News