வியாழக்கிழமை, ஜனவரி 23, 2025

சக நடிகர்களை தூக்கிவிட்டு அழகு பார்க்கும் கமல்.. கலைஞர்களை வளர விட மாட்டார் என பேசியது பச்ச பொய்

உலக நாயகன் கமல்ஹாசன் தான் வளர்ந்தது மட்டுமல்லாமல் தமிழ் சினிமாவையும் வளர்த்து விட்டுள்ளார். அதாவது வெளிநாட்டில் உள்ள தொழில் நுட்பங்களை முதலில் தனது படங்கள் மூலம் தமிழ் சினிமாவில் கமல் அறிமுகப்படுத்தினார். அதேபோல் பல கலைஞர்களுக்கும் கமல் வாழ்வு தந்துள்ளார்.

ஆனால் சிலர் கமல் மிகுந்த சுயநலவாதி, நடிகர்களை வளர விடமாட்டார் என்ற ஒரு கருத்தை பரப்பி வருகிறார்கள். அதற்கு முற்றுப்புள்ளி வைக்கும்படி காதல் சுகுமார் ஒரு பேட்டியில் தனக்கு நடந்த அனுபவத்தை கூறி அனைவரையும் ஆச்சரியப்பட வைத்துள்ளார்.

Also Read : துணிவு ஜெயிக்கலனா உன் கேரியர் கிளோஸ்.. கமல் போட்ட கண்டிஷனால் பதறிப்போன வினோத்

அதாவது காதல் படத்தின் மூலம் அடையாளம் பெற்றவர்தான் காதல் சுகுமார். இந்த படத்தில் நடித்த அனைவருக்குமே பட்டப் பெயராக காதல் அமைந்தது. அதாவது காதல் பரத், காதல் சந்தியா, காதல் சுகுமார் என்ற மூவரையும் தற்போது வரை இப்படியே அடையாளப்படுத்துகிறார்கள்.

இந்நிலையில் வசூல்ராஜா எம்பிபிஎஸ் படத்தில் நடிக்கும் வாய்ப்பு வந்த போது தான் காதல் படத்திலும் இவருக்கு வாய்ப்பு கிடைத்துள்ளது. இந்த இரண்டு படங்களுக்குமே ஒரே நாளில் சூட்டிங் நடத்தப்பட்டுள்ளது. கமல் படத்தில் நடிப்பது மிகப் பெரிய விஷயம் என காதல் படத்தை சுகுமார் நிராகரித்துள்ளார்.

Also Read : கமல், ரஜினி இணைந்து நடித்த மொத்த படங்கள்.. அதில் இத்தனை வெற்றி படங்களா?

ஆனால் இந்த விஷயம் எப்படியோ கமலுக்கு தெரியவந்துள்ளது. ஆகையால் சுகுமாரை அழைத்த காதல் ஷங்கர் தயாரிக்கும் படம். அந்தப் படத்தில் போய் நடியுங்கள் என அறிவுரை கூறியுள்ளார். அதை ஏற்க மனமில்லை என்றாலும் கமல் சொன்னதற்காக சுகுமார் காதல் படத்தில் நடித்துவிட்டு வந்துள்ளார்.

இங்க வசூல்ராஜா எம்பிபிஎஸ் செட்டுக்கு வந்தவுடன் சுகுமார் நடிக்க வேண்டிய படப்பிடிப்பு மட்டும் நடத்தாமல் வைத்துள்ளனர். அதன் பின்பு காதல் சுகுமார் இந்த படத்திலும் நடித்து முடித்துள்ளார். கமல்ஹாசனால் தான் இந்த வாய்ப்பு கிடைத்ததாக சுகுமார் நெகிழ்ச்சியாக பேசி உள்ளார்.

Also Read : கமல் தனக்கே உரிய காமெடியில் கலக்கிய 6 படங்கள்.. எப்போதுமே ரசிக்கும்படி செய்த தெனாலி

Trending News