திங்கட்கிழமை, ஜனவரி 13, 2025

மணிரத்தினத்தின் கூட்டணியால் ரொமான்டிக் லுக்குடன் மாறிய கமல்.. 69 வயதிலும் துள்ளலுடன் இருக்கும் நாயகன்

Kamalhassan: ஒருவருக்கு நல்ல நேரம் வந்துவிட்டால் அவருடைய வளர்ச்சி இரட்டிப்பாக அதிகரித்துக் கொண்டே போகும். இந்த ஒரு விஷயம் தற்போது சினிமாவில் இருக்கும் முன்னணி நடிகர்களில் யாருக்கு பொருந்துதோ இல்லையோ கமலுக்கு நன்றாகவே ஒர்க் அவுட் ஆகி வருகிறது. அதாவது விக்ரம் படத்தின் வெற்றி மூலம் நடிப்பிலும் தயாரிப்பிலும் பட்டையை கிளப்பிக் கொண்டு வருகிறார்.

அந்த வகையில் சிவகார்த்திகேயன் நடிப்பில் அமரன் படத்தை தயாரித்து வருகிறார். இன்னொரு பக்கம் ஷங்கர் இயக்கத்தில் கமல் நடித்த இந்தியன் படத்தின் இரண்டாம் பாகம் ரிலீசுக்கு தயாராகி இருக்கிறது. இதற்கு அடுத்தபடியாக மணிரத்தினத்துடன் கூட்டணி வைத்து தக் லைஃப் படத்தில் களமிறங்கி இருக்கிறார்.

ஏற்கனவே இவர்கள் கூட்டணியில் வெளிவந்த நாயகன் சினிமாவையே புரட்டி போடும் அளவிற்கு ஒரு சாதனை படமாக தற்போது வரை பேசப்பட்டு வருகிறது. அந்த வகையில் இப்படமும் நிச்சயமாக ஒரு சரித்திரத்தை ஏற்படுத்தும் வகையில் இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் இப்படத்தின் படப்பிடிப்பு செர்பியாவில் நடைபெற்றது.

Also read: யானை வாய்க்கு சோளப்பொரி கொடுத்த ஒடிடி.. முன்னணி நடிகரின் படத்தால் புஸ்வானமாகிப்போன கமல்

அங்கே வைத்து கமலின் ஆக்சன் காட்சிகள் அனைத்தும் படமாக்கப்பட்டது. இன்னும் வெளிநாடு காட்சிகள் இருக்கும் நேரத்தில் கமல் அதையெல்லாம் வேண்டாம் என்று ஒத்தி வைத்திருக்கிறார். அதற்கு காரணம் தற்போது அரசியலில் அடுத்த கட்ட நடவடிக்கையை எடுக்கும் விதமாக DMK கட்சியுடன் இணைந்து செயல்படுவதால் அதற்கான வேலையில் இறங்கி இருக்கிறார்.

இப்படி நடிப்பு ஒரு பக்கம் இருந்தாலும் அரசியலிலும் ஒரு கை பார்த்து விட வேண்டும் என்று அதற்கான பிளானை போட்டு முடித்துவிட்டார். தற்பொழுது மறுபடியும் படப்பிடிப்புக்குப் போன கமல், வயசு ஒன்னும் பெரிய விஷயமே இல்லை என்பதற்கு ஏற்ப 69 வயதிலும் துள்ளலுடன் இருக்கும் புகைப்படத்தை எடுத்து வெளியிட்டு இருக்கிறார்.

kamalhassan
kamalhassan
kamal
kamal

அதாவது மணிரத்தினம் முக்கால்வாசி எடுக்கும் படங்கள் காதல் மற்றும் ரொமாண்டிக் கதையாக தான் இருக்கும். அதனால் அவருடன் கூட்டணி வைத்ததால் என்னமோ உலகநாயகனும் தற்போது ரொமாண்டிக் லுக்குடன் மாறி இருக்கிறார். அதில் அவரை பார்க்கும் பொழுது கருப்பு கலர் ஷர்ட் போட்டு காலரை தூக்கிவிட்டு, அதற்கு மேட்ச் ஆக மாதிரி ஜீன்ஸ் பேண்ட்டும் போட்டு,கருப்பு கூலர் கண்ணாடி போட்டு ரொம்பவே கேஷுவலான ஸ்டைலிஷ் போஸ் கொடுத்து தூக்கலாக இருக்கிறார்.

Also read: இவ்வளவு மலிவா விலை போயிட்டீங்களே ஆண்டவரே.. ஒரே வார்த்தையில் கமல் சாயத்தை வெளுத்த கஸ்தூரி

Trending News