கோலிவுட்டில் கமலஹாசன், ரஜினியை தொடர்ந்து நாசருக்கும் ‘கல்யாண அகதிகள்’ என்ற படத்தில் வாய்ப்பளித்து அறிமுகப்படுத்தியவர் இயக்குனர் கே பாலசந்தர். அன்று துவங்கி 300க்கும் மேற்பட்ட படங்களில் நடித்து பெயர் போன நாசர் ஒரு சில தொலைக்காட்சி தொடர்களிலும் நடித்துள்ளார்.
அதிலும் மகேந்திரனின் காட்டுப் பூக்கள் மற்றும் சேனாதிபதியின் பனகாடு போன்றவற்றுள் இவரது நடிப்பு திறமையை திரையுலகமே கண்டு பிரமித்தது. அதன்பின் 1995 ஆம் ஆண்டு அவதாரம் என்ற படத்தை தாமே இயக்கி நடித்தார். இப்படி நடிகர், இயக்குனர், திரைக்கதை, வசனம், பாடலாசிரியர் பாடகர் என பன்முகத் திறமை கொண்ட நாசருக்கு உலக நாயகன் ஜெயிப்பதற்கு புது ரூட் போட்டு கொடுத்தார்.
முதலில் நாசர் மிரட்டும் வில்லனாக பல படங்களை கலக்கிக் கொண்டிருந்தார். கமலின் குருதிப்புனல், தேவர் மகன் என அடுக்கடுக்காக வில்லனாகவே சினிமாவில் அவதாரம் எடுத்து வந்தார். இவர் கிட்டத்தட்ட 50-க்கும் மேற்பட்ட படங்களில் வில்லனாக நடித்திருக்கிறார்.
இப்படி வில்லன் அவதாரம் மட்டுமே எடுத்துக் கொண்டு இருந்த நாசரை ஒரே படத்தால் வேறொரு பரிமாணத்தில் மாற்றினார் உலகநாயகன். வில்லனாக நடித்துக்கொண்டிருந்த நாசருக்கு அவ்வை சண்முகி என்ற படத்தில் வாய் பேச முடியாத ஊமையாக காமெடி கதாபாத்திரம் ஒன்றைக் கொடுத்துள்ளார்.
Also Read: புலம்பித் தவிக்கும் ஸ்ருதிஹாசன்.. மருந்து கொடுத்து காப்பாற்றுவாரா கமலஹாசன்
அந்த கதாபாத்திரத்தை நாசருக்காக சிபாரிசு செய்தவர் கமல்தான். 1996 ஆம் ஆண்டு கேஎஸ் ரவிக்குமார் இயக்கத்தில் கமலஹாசன் உடன் மீனா, நாகேஷ், ஜெமினி கணேசன் உள்ளிட்டோர் நடிப்பில் வெளியான அவ்வை சண்முகி திரைப்படம் சூப்பர் ஹிட் அடித்தது.
இதில் கமலஹாசன் வயதான பெண்கதாபாத்திரம் உள்ளிட்ட 2 வேடத்தில் நடித்து கலக்கி இருப்பார். இவருடன் நாசரும் ஊமை வேடத்தில் நகைச்சுவையாக நடித்து கலக்கி இருப்பார். இந்த படத்தில் நாசருக்கு கிடைத்த பேரும் புகழுக்கெல்லாம் கமல்தான் காரணம். அதுமட்டுமின்றி வில்லனாகவே நாசரை பார்த்த ரசிகர்களுக்கும் காமெடி நடிகராக வேறு பரிமாணத்தில் அவ்வை சண்முகி படத்தில் பார்க்கும் வாய்ப்பு கிடைத்தது.
Also Read: பொங்கல் டிஆர்பி-காக அடித்துக்கொள்ளும் 5 சேனல்கள்.. டிவியில் ஒளிபரப்பாக உள்ள மொத்த படங்களின் லிஸ்ட்