வியாழக்கிழமை, ஜனவரி 16, 2025

விக்ரம் படத்தில் இணைந்த வாரிசு நடிகர்.. அதுவும் என்ன கேரக்டர் தெரியுமா?

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் கமல்ஹாசன், விஜய் சேதுபதி, ஃபகத் பாசில் உள்ளிட்ட முன்னணி நடிகர்கள் நடிக்கும் விக்ரம் படத்தில் பிரபல நடிகர் ஜெயராம் மகன் காளிதாஸ் இணைந்துள்ளார். அதுவும் இப்படத்தில் கமல்ஹாசனுக்கு மகனாக அவர் நடிக்க உள்ளார்.

கமல் மற்றும் ஜெயராம் நட்பு கடந்த 1989ஆம் ஆண்டு முதல் தொடர்ந்து வருகிறது. பஞ்சதந்திரம், தெனாலி உள்ளிட்ட பல படங்களில் இருவரும் இணைந்து நடித்துள்ளனர். நட்பு காரணமாக கமல் தனது பல படங்களில் ஜெயராமுக்கு முக்கிய வேடம் அளித்துள்ளார்.

மேலும் தனது நண்பரின் மகன் என்பதற்காக ஒரு பக்க கதை படத்தின் விழாவில் காளிதாஸை பத்திரிக்கையாளர் முன் கமல்ஹாசன் அறிமுகம் செய்து வைத்தார். இந்நிலையில் தனது அடுத்த படமான விக்ரம் படத்தில் தன் மகனாக நடிக்க காளிதாஸூக்கு வாய்ப்பு அளித்துள்ளார்.

காளிதாஸ் ஜெயராம் தமிழில் பெரிய அளவில் படங்களில் நடிக்கவில்லை என்றாலும் சமீபத்தில் வெளியான ஆந்தாலஜி படமான பாவக்கதைகள் படத்தில் தங்கம் என்ற குறும்படத்தில் இவர் நடித்திருந்தார். திருநங்கையாக மாறத் துடிக்கும் ஒரு இளைஞனின் காதலையும், அவன் படும் துன்பங்களையும் இக்கதை வெளிப்படுத்தியிருந்தது. அதில் தனது நடிப்பின் மூலம் பலரது பாராட்டையும் காளிதாஸ் பெற்றிருந்தார்.

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் கமல் நடிக்கும் விக்ரம் படத்தின் ஷுட்டிங் ஆரம்பமானது முதல் ஏதாவது ஒரு தகவல் வந்து கொண்டே இருக்கிறது. தற்போது கமலை தொடர்ந்து வில்லன்களில் ஒருவராக நடிக்கும் ஃபகத் ஃபாசிலும் ஷுட்டிங்கில் இணைந்துள்ளார்.

ஒரு ஆக்ஷன், த்ரில்லர் படமாக அமைக்கப்பட்டு வரும் இப்படத்தில் விஜய் சேதுபதி, ஃபகத் ஃபாசில் உள்ளிட்ட 5 பேர் வில்லன்களாக நடிக்கிறார்கள். கமலின் தீவிர ரசிகரான லோகேஷ் கனகராஜ் இயக்கும் இந்த படம் நிச்சயம் ரசிகர்கள் கொண்டாடும் படமாக அமையும் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை.

kamal-kalidas
kamal-kalidas

Trending News