செவ்வாய்க்கிழமை, டிசம்பர் 24, 2024

நடிகையின் வெறுப்பை சம்பாதித்த கமல்.. கலாச்சாரத்தை கெடுத்து 80-களில் போட்ட ஆட்டம்

ரொமான்டிக் நாயகனாக 80களில் தமிழ் சினிமாவை கலக்கிய கமலஹாசன், இப்போது வரை தனது துள்ளலான நடிப்பு குறையாமல் நடித்துக் கொண்டிருக்கிறார். இவரிடம் மரக்கட்டையை கொடுத்தாலும் அதனுடனும் ரொமான்ஸ் செய்வார் என்றும் அவருடன் நடித்த நடிகைகள் பலரும் கமலின் உணர்ச்சிப்பூர்வமான நடிப்பை விமர்சித்ததுண்டு.

இப்படிப்பட்ட கமல் சினிமாவில் மட்டுமல்ல நிஜ வாழ்க்கையிலும் கொஞ்சம் வித்தியாசமானவர்தான். 1978 ஆம் ஆண்டு கமலுக்கு திருமணம் நடந்தது. ஆனால் அந்த திருமணம் கூட கமலின் விருப்பம் இல்லாமலே நடந்தது. ஏனென்றால் கமல் காதலித்த நடிகையை திருமணம் செய்து கொள்ள அவருக்கு அவ்வளவு கசந்தது.

Also Read: லோகேஷின் 4 படங்களிலும் கமலின் சாயல் இருக்கும்.. இத்தன நாளா இந்த ரகசியம் தெரியாம போச்சே

அவருடைய முதல் மனைவி வாணி கணபதி இருவருக்கும் காதல் திருமணம். வாணி கணபதி ஒரு பரதநாட்டியம் கலைஞர் மற்றும் நடிகையும் கூட. இவர் மேல்நாட்டு மருமகள், உல்லாச பறவைகள் போன்ற படங்களிலும் நடித்திருக்கிறார். இந்த படத்திற்கு பிறகு தான் கமலஹாசனுக்கும் வாணி கணபதிக்கும் காதல் ஏற்பட்டு இருக்கிறது.

ஆனால் அப்பொழுதே கமல் திருமணம் மீது நம்பிக்கை இல்லாமல் வாணி கணபதியை லவ் மட்டுமே செய்து கொண்டு லிவிங் ரிலேஷன்ஷிப்பில் இருந்தார். பின்னர் பாலச்சந்தர் உன்னுடைய சினிமா கேரியர் போய்விடும் நீ அவங்களை ஒழுங்காக கல்யாணம் செய்து கொள் என்று விடாப்பிடியாய் நின்றாராம்.

Also Read: தளபதியை ஒதுக்கும் உலக நாயகன்.. குளறுபடி செய்ததால் கோபத்தின் உச்சகட்டத்தில் கமல்

அப்போதே கமல் பல நடிகைகளுடன் கிசு கிசுக்கப்பட்டார். தமிழ் கலாச்சாரத்தில் திருமணம் என்பது மிகப் புனிதமானது. ஆனால் மேலை நாடுகளில் பின்பற்றப்படும் லிவிங் டுகதர் ரிலேஷன்ஷிப்பின் அதிக ஈடுபாடு கொண்ட கமலின் கொள்கைகள் மூலம் பெண்களிடம் வெறுப்பை சம்பாதித்துக் கொண்டார்.

கமல்  விருப்பம் இல்லாமல் தான் முதல் திருமணத்தை செய்து கொண்டார். அவரைப் பொறுத்த வரையில் பிடித்தால் வாழலாம் பிடிக்கவில்லை என்றால் பிரிந்து விடலாம் என்பது விரும்பியவர். ஆனால் இது கலாச்சாரத்தை கெடுத்து விடும் என்பது பலருடைய விவாதம்.

Also Read: இந்தியன் 2 சூட்டிங் ஸ்பாட்டுக்கு கெத்தாக வந்த சேனாதிபதி.. இணையத்தில் ட்ரெண்டாகும் வைரல் போட்டோ

Trending News