வெள்ளிக்கிழமை, டிசம்பர் 27, 2024

ரஜினியை போட்டு ஆட்டும் கர்மா.. டபுள் மடங்கு சம்பளம், விட்ட இடத்தை பிடித்த உலகநாயகன்

Kamal And Rajini Salary: சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் தற்போது நெல்சன் இயக்கத்தில் சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் ஜெயிலர் படத்தில் நடித்து வருகிறார். ஏகப்பட்ட திரை பிரபலங்கள் நடிக்கும் இந்த படத்திற்கு அனிருத் இசையமைக்கிறார். இப்போது ரஜினியின் சினிமா மற்றும் அரசியல் இரண்டுமே வீழ்ச்சியை சந்தித்து வருகிறது.

இதற்கு காரணம் அவருடைய கர்மா தான் என்று பலரும் கூறி வருகிறார்கள். அதாவது குழந்தை நட்சத்திரமாகவே சினிமாவில் அறிமுகமானவர் உலகநாயகன் கமலஹாசன். ஆரம்பத்தில் சின்ன சின்ன வேடங்களில் நடித்து வந்து அதன் பிறகு கதாநாயகன் அவதாரம் எடுத்தார். அந்தச் சமயத்தில் அவரது படங்களில் வில்லனாக நடித்து வந்தார் ரஜினி.

Also Read : குடும்ப பிரச்சனையா, அரசியல் சதியா.? இரண்டு மாத கருவுடன் உயிர் நீத்த ரஜினி பட ஹீரோயின்

மேலும் அப்போது கமல் வாங்கும் சம்பளம் 20,000 என்றால் ரஜினிக்கு 3 ஆயிரத்தில் இருந்து 5000 வரை தான் கொடுக்கப்படும். ஆனால் தனது தனித்துவமான ஸ்டைலின் மூலம் ரசிகர்களை வெகுவாக ரஜினி கவர்ந்தார். அடுத்தடுத்து கமர்சியல் படங்களை கொடுத்து வெற்றி பெற்று வந்தார்.

இதனால் ரஜினியின் சம்பளமும் அதிகமாக சூப்பர் ஸ்டார் என்ற பட்டத்தை பெற்றார். அந்த சமயத்தில் தான் கமலின் சினிமா கேரியர் வீழ்ச்சி அடைய தொடங்கியது. இந்த இடைப்பட்ட காலத்தில் ரஜினி டாப் நடிகர்களின் பட்டியலில் முதல் இடத்திற்கு சென்று விட்டார். அதுமட்டுமின்றி 100 கோடியை அவரது சம்பளம் தொட்டது.

Also Read : சத்யராஜுக்கு தானாக அமைந்த 5 கேரியர் பெஸ்ட் மூவிஸ்.. ரஜினி கமல் போல் இமேஜ் குறையாத மகா நடிகன்

ஆனால் சமீபகாலமாக ரஜினியின் படங்கள் தொடர் தோல்வியை தழுவி வருகிறது. இதன் காரணமாக அடுத்தடுத்த படங்களின் சம்பளம் குறைய தொடங்கி விட்டது. அதன்படி ஜெயிலர் படத்திற்கு 70 கோடி மட்டும் சம்பளம் பெறுகிறார். ஆனால் விக்ரம் படத்தின் மூலம் கம்பேக் கொடுத்துள்ள கமல் படு பயங்கரமாக செயல்பட்டு கொண்டிருக்கிறார்.

அதன்படி சினிமாவில் நடிப்பது ஒருபுறம் இருந்தாலும் தயாரிப்பின் மூலமும் கல்லா கட்டி வருகிறார். இப்போது பிரபாஸின் ப்ராஜெக்ட் கே படத்தில் வில்லனாக நடிப்பதற்கு மட்டும் கிட்டத்தட்ட 150 கோடி சம்பளம் பெறுகிறார். படத்தில் வில்லன் கதாபாத்திரத்திற்கு ரஜினியை விட டபுள் மடங்கு சம்பளம் பெறுகிறார் உலக நாயகன்.

Also Read : அட ரஜினி, விஜய் கையிலேயே இத்தனை படங்கள் இல்லையே.. கமல் லிஸ்டில் இருக்கும் 4 படங்கள்!

Trending News