தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக இருக்கும் கமலஹாசன் வாழ்க்கையில் நடிகை சரிகாவுக்கு மிகப் பெரிய பங்குண்டு. கமல்ஹாசனின் புகழ் ஹிந்தி சினிமா முழுக்க பரவுவதற்கு இவர்களுடைய திருமணமும் ஒரு காரணம். ஆனால் வழக்கம்போல நடிகர் நடிகைகள் திருமணம் செய்து கொண்டால் விரைவில் விவாகரத்து செய்து விடுவார்கள் என்ற பேச்சை உண்மையாக்கும் வகையில் இருவரும் குறிப்பிட்ட சில வருடங்களிலேயே பிரிந்துவிட்டனர்.
கமல் மற்றும் சரிகா தம்பதியினருக்கு ஸ்ருதிஹாசன் மற்றும் அக்ஷரா ஹாசன் என்ற இரண்டு மகள்கள் இருக்கின்றனர். கமல்ஹாசன் தமிழ் சினிமாவில் ஆளவந்தான் என்ற மிகப்பெரிய தோல்வி படத்தை கொடுத்திருந்த நேரம் அது.
அதற்கு சில வருடங்களுக்கு பின்னர் இருவரும் கருத்து வேறுபாடு காரணமாக விவாகரத்து செய்து விட்டனர். அந்த நேரத்தில் சரிகா பல லட்சம் கடனாளி ஆகிவிட்டாராம். உண்மையை சொல்ல வேண்டும் என்றால் அடுத்த வேளை சோற்றுக்கே கஷ்டப்படும் நிலைமையாம்.
அவர் தங்கியிருக்கும் வீடு முதல் வைத்திருந்த விலையுயர்ந்த பொருள்கள் வரை அனைத்துமே விற்பனை செய்ய வேண்டிய நிலைமை. அந்த நேரத்தில் மீண்டும் சினிமாவில் ரீஎன்ட்ரி கொடுக்க ஆர்வம் காட்டினாராம் சரிகா.
இதுகுறித்து தமிழ் சினிமாவில் தனக்கு தெரிந்த அனைத்து தயாரிப்பாளர்களிடமும் தூது விட்டுள்ளார். ஆனால் யாருமே அதற்கு முன் வரவில்லையாம். அதே போல் தான் தயாரிப்பாளர் கலைப்புலி எஸ் தாணுவிடம் கேட்டுள்ளார்.
ஆனால் கலைப்புலி தாணுவுக்கு கமல்ஹாசனுக்கும் ஏற்கனவே ஆளவந்தான் படத்தில் வாய்க்காத்தகராறு இருந்ததால் முதலில் முடியாது என்று சொல்லிவிட்டாராம். ஆனால் அதன்பிறகு சரிகா தாணுவிடம் பட வாய்ப்பு கேட்டு கெஞ்சியதால், எவ்வளவு பெரியவங்க நீங்க எங்கிட்ட பொய் கெஞ்சலாமா என வாய்ப்பு கொடுத்தாராம்.
சரிகா 2 லட்சம் சம்பளம் கேட்க 3 லட்சமாக வைத்துக் கொள்ளுங்கள் என பெருந்தன்மையுடன் கொடுத்து அவர்கள் கடனை அடைக்க உதவி செய்ததால் இன்றுவரை கலைப்புலி தாணுவை மனதில் உயர்ந்த இடத்தில் வைத்துள்ளாராம் சரிகா.
