செவ்வாய்க்கிழமை, ஜனவரி 7, 2025

2011 இல் வடிவேலு செய்ததை 2024 இல் செய்யும் கமல்.. இந்த ரெண்டு காரணத்திற்கு தான் திமுகவுக்கு ஆதரவு

Kamal Haasan: எதுக்கு வந்தோம்ன்றதே மறந்துட்டு, இப்படி சமையல்காரனா மாறிட்டானேன்னு சந்தானம் ஒரு காமெடியில் சொல்லுவாரு. அப்படித்தான் இப்ப நம்ம ஆண்டவரும் ஆகிட்டாரு. தலைவா, நீங்க எதுக்கு அரசியல் வர சொன்னிங்கன்னு ஞாபகம் இருக்கா என்று அவரை கேள்வி கேட்டு வருகிறார்கள்.

ரஜினி அரசியலுக்கு வருவார் என பெரிய எதிர்பார்ப்பு எல்லாருக்கும் இருந்தது. அதற்கு காரணம் அவர் படங்களில் வசனங்களாக இருக்கட்டும், அவருடைய ஒரு சில நடவடிக்கைகளாக இருக்கட்டும் அவருடைய அரசியல் நகர்வை உறுதிப்படுத்தியது.

ஆனால் கமலஹாசன் அப்படி இல்ல. அவர் அரசியலுக்கு வர போறாரு என்று ஒரு பத்து வருஷத்துக்கு முன்னாடி சொல்லி இருந்தா யாருமே நம்பி இருக்க மாட்டாங்க. கமல் ஆரம்பித்தது திடீர் அரசியல்.

கடந்தவை, கடந்தவையாக இருக்கட்டும் ஆனால் எதுவும் மறந்தவையாக இருக்காது, நான் தராசின் நடு முள். இப்படி எல்லாம் யார் பேசினது யோசிக்கிறீங்களா. மக்கள் நீதி மையம் கட்சியை மதுரையில் ஆரம்பித்தபோது கமல் பேசியது தான்.

அது மட்டும் இல்லாமல் கமல் கட்சி ஆரம்பிக்கும் வீடியோ ஒன்று வெளியான போது அதில் முதலில் ஸ்டாலினின் குரல் தான் வரும். அவர் பேசுவதை கேட்டுவிட்டு டென்ஷன் ஆகி கையில் இருக்கும் டார்ச் லைட்டை வைத்து டிவியை உடைப்பார் கமல்.

இப்படி எல்லாம் புரட்சி பண்ணிவிட்டு தலைவன் இப்போ சைலன்ட்டா திமுகவுக்கு ஆதரவு தெரிவித்துவிட்டார். மாற்றத்தை கொண்டு வரேன் என்று சொல்லிவிட்டு கட்சி ஆரம்பித்த கமல், திமுக கட்சியோடு ஐக்கியமாகிவிட்டார்.

இப்ப எதுக்கு வந்தோம் என்பதை மறந்துட்டு வரும் நாடாளுமன்ற தேர்தலுக்காக திமுக கட்சிக்கு தீவிர பிரச்சாரம் செய்து வருகிறார். இவர்கிட்ட ஆரம்பம் எல்லாம் அசத்தும் விதமாகத்தான் இருந்தது. கட்சி ஆரம்பிக்கும் போதே அரவிந்த் கெஜ்ரிவாலை வர வைத்து பெரிய அளவில் ட்ரெண்ட் ஆகினார்.

அரவிந்த் கெஜ்ரிவால் ஆளும் பாஜகவை எதிர்த்து இப்போ கம்பி எண்ணிக் கொண்டிருக்கிறார். ஆனால் நம்ம தலைவன் கமுக்கமா ஒரு ராஜ்யசபா சீட்டு வாங்கிட்டு திமுகவுக்கு ஆதரவு என்று சொல்லிவிட்டார். அதிலும் எதுக்கு திமுகவுக்கு ஆதரவு என்பதற்கு அவர் சொன்ன காரணம்தான் வேற லெவல்.

இல்லத்தரசிகளுக்கு மாதம் ஆயிரம் ரூபாய் கொடுக்க வேண்டும் என்பது அவருடைய ஆசை. பள்ளி மாணவர்களுக்கு காலை உணவு கொடுக்க வேண்டும் என்பதும் நீண்ட நாள் ஆசைதான். இதை திமுக அரசு செய்து விட்டதாம்.

வடிவேலு செய்ததை செய்யும் கமல்

அதனால் தான் அவர்களுக்கு இந்த ஆதரவு என வகையாக வடை சுட்டுக் கொண்டிருக்கிறார். 2011 இல் வைகைப்புயல் வடிவேலு திமுக கட்சிக்கு ஆதரவு தெரிவித்து பிரச்சாரம் செய்தார். இப்போ 2024 இல் அதை சிறப்பாக கமல் செய்து கொண்டிருக்கிறார்.

ஏற்கனவே இருக்கும் கட்சிக்கு ஆதரவு தெரிவிக்க வேண்டும் என்றால் அப்போவே அதை செய்திருக்க வேண்டும். மாற்றம் கொண்டு வரப் போகிறேன் என மக்கள் மனதில் ஆசையை கிளப்பி விட்டிருக்கக் கூடாது. இப்படி மொத்தமா சரணடைவதற்கு பருத்தி மூட்டை குடோன்லயே இருந்திருக்கலாம்.

Trending News