புதன்கிழமை, ஜனவரி 15, 2025

கமலுக்கு வந்த இக்கட்டான சூழ்நிலை.. எல்லாத்துக்கும் காரணம் இந்த விக்ரம் தான்

கமல் நடிப்பில் தற்போது வெளிவந்துள்ள விக்ரம் திரைப்படம் அதிரிபுதிரி ஹிட் அடித்துள்ளது. எங்கு திரும்பினாலும் தற்போது இந்தப் படத்தைப் பற்றிதான் ரசிகர்கள் பேசிக் கொண்டிருக்கின்றனர். அந்த வகையில் கமல் தற்போது சர்வதேச அளவில் ட்ரெண்டிங்கில் இருக்கிறார்.

இதனால் கமல் ஒருபுறம் மகிழ்ச்சியில் இருந்தாலும் மற்றொருபுறம் சில இன்பமான பிரச்சனைகளும் வந்த வண்ணம் இருக்கின்றதாம். அதாவது இப்போது கமல் விக்ரம் படத்தின் பிளாக்பஸ்டர் வெற்றியால் பல நிகழ்ச்சிகளில் பங்கு பெற்று வருகிறார்.

யூடியூப் போன்ற சோசியல் மீடியா தளங்களில் எங்கு பார்த்தாலும் கமலின் பேட்டிதான் வந்துகொண்டிருக்கிறது. மேலும் சின்னத்திரை நிகழ்ச்சிகளில் கூட அவர் அதிக அளவில் பங்கேற்று வருகிறார். அந்த அளவுக்கு விக்ரம் படம் மிக பெரிய அளவில் கொண்டாடப்பட்டு வருகிறது.

இன்னும் ஆறு மாதங்கள் இந்தப் படத்தை வைத்து தான் சினிமாவில் எல்லாவற்றிற்கும் பிஸ்னஸ் நடைபெறப்போகிறது. குறிப்பாக எந்த நிகழ்ச்சியாக இருந்தாலும் அதில் சிறப்பு விருந்தினராக கமல் தான் இருக்க வேண்டும் என்று பலரும் விரும்புகின்றனர்.

அப்படி ஒரு பிளானில் தான் இயக்குனர் லிங்குசாமி தற்போது இருக்கிறார். அவர் இப்போது தெலுங்கில் தி வாரியர் என்னும் திரைப்படத்தை எடுத்துக் கொண்டிருக்கிறார். அந்த படம் வரும் ஜூலை 14 ஆம் தேதி அன்று பிரம்மாண்டமாக ரிலீஸ் ஆகிறது.

இந்த படத்தில் இருந்து தற்போது இரண்டு பாட்டுகளை ரிலீஸ் செய்துள்ளனர். அந்த இரண்டுமே செம ஹிட் அடித்துள்ளது. இதனால் இந்த படத்தை எப்படியாவது பிளாக்பஸ்டர் ஹிட் ஆக்க வேண்டும் என்று லிங்குசாமி மிகப்பெரிய ஒரு திட்டத்தை போட்டுள்ளார்.

அதாவது இந்த படத்தின் டிரைலர் விரைவில் ரிலீஸ் ஆக இருக்கிறது. அந்த ட்ரெய்லர் வெளியீட்டு விழாவில் கலந்து கொள்வதற்கு கமல் அழைக்கப்பட்டிருக்கிறார். இதன் மூலம் படத்தை ஈசியாக பிசினஸ் செய்து விடலாம் என்று லிங்குசாமி பிளான் போட்டுள்ளார்.

இன்னும் இதுபோன்ற பல அழைப்புகள் கமலுக்கு வந்துகொண்டே இருக்கிறது. அதனால் இந்த இக்கட்டான சூழ்நிலையை எப்படி சமாளிப்பது என்று தெரியாமல் கமல் திணறி வருகிறார். மேலும் இதுபோன்ற அழைப்புகளை தவிர்க்க முடியாத சூழ்நிலையும் அவருக்கு ஏற்பட்டிருக்கிறது.

Trending News