ஞாயிற்றுக்கிழமை, டிசம்பர் 22, 2024

எல்லா காதலும் கல்யாணத்துல முடியனுங்கற அவசியம் இல்ல.. 19 வயதில் கமல் காதலித்த நடிகை

Actor Kamal: இந்த வயதிலும் முழு எனர்ஜியோடு நடித்து வரும் கமல் தன்னைப் பற்றி வரும் சர்ச்சைகளுக்கு அஞ்சாதவர். அதேபோல் மனதில் பட்டதை தைரியமாக பளிச்சென்று பேசக் கூடியவர். அதனாலேயே இவர் பல விமர்சனங்களுக்கு ஆளாகி வருகிறார்.

இதில் அவருடைய காதல் வாழ்க்கை பற்றி வந்த விமர்சனங்கள் தான் ஏராளம். அதில் கமலுக்கும் ஸ்ரீவித்யாவுக்கும் இருந்த காதல் இன்று வரை பல்வேறு கேள்விகளை எழுப்பி வருகிறது. ஆனால் பல வருடங்களுக்கு முன்பே கமல் அது குறித்து விளக்கமாக தெரிவித்து இருக்கிறார்.

ஒரு தனியார் சேனலுக்கு அவர் அளித்த பேட்டியில் ஸ்ரீவித்யாவுடன் இருந்த காதல் குறித்து பேசி உள்ளார். அபூர்வ ராகங்கள் படத்தில் நடித்த போது நான் திறமையானவர் என்பதை உணர்த்திய என்னுடைய அன்பு காதலி ஸ்ரீவித்யா என்று கூறியிருக்கிறார்.

Also read: குருவிற்கு கூட நன்றி கடன் செலுத்த முதுகு எலும்பு இல்லாத கமல்.. இந்த விஷயத்தில் ரஜினி எவ்வளவோ பரவாயில்ல!

மேலும் எல்லா காதலும் கல்யாணத்தில் தான் முடிய வேண்டும் என்ற அவசியம் இல்லை. எங்கள் இருவருக்கும் அந்த காதல் கடைசிவரை இருந்தது என்றும் தெரிவித்திருந்தார். அதேபோல் ஸ்ரீவித்யாவும் கமலுடன் ஆன தன்னுடைய காதலை வெளிப்படையாக கூறி இருந்தார்.

எங்களுடைய காதல் அனைவருக்கும் தெரியும். ஆனால் என் அம்மா இருவரும் சினிமாவில் பெரிய ஆளாக வரவேண்டும் என்று ஆசைப்பட்டார்கள். அதனால் கமல் கோபப்பட்டு என்னுடன் பேசுவதையே தவிர்த்தார். அதன் பிறகு அவர் பெரிய நடிகராக வளர்ந்ததும் வேறு ஒரு பெண்ணை திருமணம் செய்து கொண்டார். இது எனக்கு அதிர்ச்சியாக இருந்தது என அவர் தெரிவித்திருந்தார்.

அந்த வீடியோவும் இப்போது வைரலாகி வருகிறது. மேலும் ஸ்ரீவித்யா கடைசி நாட்களை எண்ணிக்கொண்டிருந்த நிலையில் பார்க்க ஆசைப்பட்டது கமல் ஒருவரை தான். அதே போல் கமலும் தன் முதல் காதலியை சந்தித்தார். இப்படி பலரையும் வியக்க வைக்கும் அளவுக்கு இருக்கும் இவர்களுடைய காதல் கல்யாணத்தில் முடிந்திருந்தால் நன்றாக இருந்திருக்கும்.

Also read: நான் கமலை பிரிவதற்கு இதுதான் காரணம்.. மறைவுக்கு முன் மனம் திறந்து பேசிய ஸ்ரீவித்யா

Trending News