திங்கட்கிழமை, டிசம்பர் 23, 2024

78 வயசு வரை நடித்த ஜாம்பவான்.. 3 தலைமுறைகளை பார்த்த கமல் பட நடிகர்

Actor Kamal: பொதுவாக சினிமாவில் இளமைக்காலத்தில் ஓடோடி நடித்தவர்கள் கூட முதுமையில் ஓய்வெடுக்க எண்ணுவார்கள். ஆனாலும் 70 வயதை கடந்து சினிமாவில் நடிப்பது சாதாரண விஷயம் அல்ல. இப்போது ரஜினி எழுபது வயதை தாண்டினாலும் வருஷத்துக்கு ஒன்று அல்லது இரண்டு படங்களை கொடுத்து வருகிறார்.

ஆனால் சிவாஜி காலத்தில் இருந்தே சினிமாவில் பயணித்த நடிகர் ஒருவர் 78 வயது வரை 600க்கும் மேற்பட்ட படங்களை கொடுத்திருக்கிறார். அதுவும் வில்லன், காமெடி, குணச்சித்திரம் என எந்த கதாபாத்திரம் கொடுத்தாலும் பட்டையை கிளப்பி விடுவார். பெரும்பாலும் கமலின் படங்களில் அவர் அதிகம் நடித்துள்ளார்.

Also Read : இரங்கல் தெரிவித்தால் கடமை முடிந்ததா.? தூக்கிவிட்ட தயாரிப்பாளரின் மரணத்தை கண்டு கொள்ளாத பாரதிராஜா, கமல்

அதாவது தேவர் மகன் படத்தில் வில்லனாக நடித்திருந்தார் காக்கா ராதாகிருஷ்ணன். இவர் சிறுவயதிலிருந்தே நாடகத் துறையில் பணியாற்றி அதன் பிறகு சினிமாவில் நுழைந்தார். ஆரம்பத்தில் சிவாஜி மற்றும் எம்ஜிஆர் போன்ற நடிகர்களின் படங்களில் நடித்து வந்தார். மேலும் கமலுடன் தேவர் மகன், வசூல்ராஜா எம்பிபிஎஸ், குணா போன்ற படங்களில் நடித்திருந்தார்.

அதுவும் குறிப்பாக வசூல் ராஜா எம்பிபிஎஸ் படத்தில் சில காட்சிகள் மட்டுமே வந்தாலும் மக்கள் மனதில் இடம் பிடித்து விட்டார். அதேபோல் விஜய் உடன் காதலுக்கு மரியாதை, அஜித்துடன் உன்னை தேடி போன்ற படங்களில் காக்கா ராதா கிருஷ்ணன் நடித்திருந்தார். இவ்வாறு சிவாஜி, எம்ஜிஆர், ரஜினி, கமல், விஜய், அஜித் என மூன்று தலைமுறை நடிகர்களையும் காக்கா ராதாகிருஷ்ணன் பார்த்து விட்டார்.

Also Read : பிக் பாஸ் சீசன் 7-க்கு கமல் வாங்கும் சம்பளம்.. அடேங்கப்பா! ஒரு படத்தோட மொத்த பட்ஜெட்

மேலும் சினிமாவை தாண்டி அவருக்கு நிறைய விஷயங்களில் ஆர்வம் இருக்கிறதாம். எந்த கேள்வி கேட்டாலும் உடனே பதில் கூறிவிடுவாராம். தள்ளாத வயதிலும் தன்னால் முடிந்தவரை சிறந்த கதாபாத்திரங்களை மக்களிடம் கொடுத்துவிட்டு சென்றிருக்கிறார் காக்கா ராதாகிருஷ்ணன். சினிமாவில் இவருடைய பங்கு அழைப்பறியாதது.

மேலும் கடந்த 2012 ஆம் ஆண்டு ஜூன் 14ஆம் தேதி மூச்சு திணறல் காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட ராதாகிருஷ்ணன் சிகிச்சை பலன் அளிக்காமல் மாரடைப்பால் உயிரிழந்தார். இவர் மண்ணுலகை விட்டு சென்று 13 வருடங்கள் ஆனாலும் அவரது படங்கள் மூலம் தற்போது வரை மக்களின் மனதில் காக்கா ராதாகிருஷ்ணன் வாழ்ந்து கொண்டிருக்கிறார்.

Also Read : கமல், அஜித், சூர்யா ஒன்றாக நடிக்க முயற்சி.. லோகேஷ் யுனிவர்ஸலை உடைக்க கௌதம் மேனன் போட்ட திட்டம்!

Trending News