வியாழக்கிழமை, அக்டோபர் 24, 2024

அஜித் ஸ்டைலை ஃபாலோ பண்ணும் கமல்.. இனிமேல் எல்லா இப்படித்தான்.. ஆனா ரசிகர்கள் ஏத்துக்கணுமே?

அஜித்குமாரின் மாதிரி நடிகர் கமல்ஹாசனும் சினிமாவில் புதிய முடிவெடுத்துள்ளார். இது ரசிகர்கள் மத்தியில் பேசு பொருளாகியுள்ளது.

வயதான பின்னும் குறையாத டூயட்

சினிமா என்பது ஒரு பொழுதுபோக்கு அம்சமாகப் பார்க்கப்பட்டாலும், தமிழகத்தில் நடிகர்களை தலைவர்களைப் போல சித்தரிப்பதும் பால் அபிஷேகம் செயதும், மண் சோறு சாப்பிடுவதும், கடவுளுக்கு இணையாக மதிக்கப்படுவதும் அதிகரித்து வருகிறது. அதேபோல் சினிமாவில் வயதான பின்னும் மூத்த நடிகர்கள் இளம் நடிகைளுடன் டூயட் பாடி, கல்லூரிகளில் படித்து வருவது போன்று காட்சிகள் படத்தில் வருவதாக ரசிகர்கள், சினிமா விமர்சகர்களால் விமர்சிக்கப்பட்டு ட்ரோலுக்கு உள்ளாகி வரும் நிலையில் இதுகுறித்து கமல் முக்கிய முடிவெடுத்துள்ள தகவல் வெளியாகிறது.

கமல்ஹாசன் தற்போது மணிரத்னம் இயக்கத்தில் தக்லைஃப் படத்தில் நடித்து வருகிறார். இப்படத்தில் கமலுடன் இணைந்து த்ரிஷா, சிம்பு, ஜெயம்ரவி, ஜோஜு ஜார்ஜ், பங்கத் திரிபாதி, ஜெயம்ரவி உள்ளிட்டோர் நடித்து வருகின்றனர். இப்படத்திற்கு ஏ. ஆர்.ரஹ்மான் இசையமைக்க இப்படத்தை மணிரத்னம், கமல்ஹாசன், ரெட் ஜெயிண்ட் மூவிஸ் இணைந்து தயாரித்து வருகின்றனர்.

இப்படத்தின் ஷூட்டிங் சமீபத்தில் முடிந்த நிலையில் இப்படத்தின் அடுத்த கட்ட பணிகளில் படக்குழு இறங்கியுள்ளது. இப்படத்தின் ஷூட்டிங் முடித்தவுடன் அமெரிக்கா சென்றுள்ள கமல்ஹாசன் மருத நாயகம் படத்தை தூசி தட்ட உள்ளதால் இப்படத்திற்காக ஏஐ தொழில்நுட்பத்தைக் கற்று வருவதாக தகவல் வெளியானது.

அத்துடன், அவரது ராஜ்கமல் பிலிம்ஸ் இண்டர்னேசனல் நிறுவனம் தயாரிப்பில் உருவாகியுள்ள அமரன் படம் வரும் அக்டோபர் 31 ஆம் தேதி ரிலீஸாகவுள்ளா நிலையில் இப்படத்தி பிரமோசனை, மலேசியா, சிங்கப்பூர், துபாய் தாண்டி அமெரிக்காவில் மேற்கொள்ள கமல் திட்டமிட்டுள்ளார். இதற்கான பணிகளும் நடந்து வருகின்றன.

சால்ட் அண்ட் பெப்பர் லுக்

இந்த நிலையில், வரலாறு படத்திலும் ஏகன் படத்திலும் நடிகர் அஜித்குமார் வயதான கெட்டப்பில் நடித்திருந்தார். இப்படங்களை அடுத்து, வெங்கட்பிரபு இயகக்த்தில் அஜித்தின் 50வது படமாக மங்காத்தாவிலும் சால்ட் அண்ட் பெப்பர் லுக்கில் நடித்து அசத்தினார். தன் ஒரிஜினல் கெட்டப்பில் வயதுக்கு ஏற்ற தோற்றத்தில் அவர் நடிப்பதாக பலராலும் பாராட்டப்பட்டது.

அதேசமயம் மற்ற மூத்த நடிகர்கள் அவரது சம வயது நடிகர்கள் டை அடித்துக் கொண்டு இன்னும் இளம் பெண்களுடன் டூயர், லிப்லாப், முத்தக் காட்சிகள் என்று படங்களில் காட்சிகள் அமைத்துக் கொண்டிருந்த போது அஜித் சற்று வித்தியாசப்பட்டு தன் இமேஜை பற்றிக் கவலைப்படாமல் விஸ்வாசம், நேர்கொண்ட பார்வை, துணிவு ஆகிய படங்களில் மாஸ் காட்டினார். இப்படங்களும் ரசிகர்களால் கொண்டாடப்பட்டன.

அஜித்தை ஃபாலோ செய்யும் கமல்ஹாசன்

இந்த நிலையில், அஜித்தின் வழியைப் பின்பற்றி கமல்ஹாசனும் இனிமேல் வயதிற்கு ஏற்ற கெட்டப்பில் சினிமாவில் நடிக்க உள்ளதாக தகவல் வெளியாகிறது. பாப நாசம் படத்தில் நடுத்தர வயது கெட்டப்பிலும், விக்ரம் படத்தில்தன் வயதையொத்த கேரக்டரில் நடித்தது பெரிய அளவில் பேசப்பட்டது. அதேபோல் இனிமேல் நடிக்கும் படங்களில் தன் வயதிற்கு ஏற்ற தோற்றம், மேக் அப்களில் கமல் கவனம் செலுத்தவிருப்பதாக கூறப்படுகிறது.

ரசிகர்கள் ஏற்றுக் கொள்வார்களா?

அமெரிக்காவில் இருந்து திரும்பிய பின் அன்பறிவ் படத்தில் நடிக்கவுள்ள கமல், இது ஆக்சன் படமாக இருந்தாலும் விக்ரமில் அசத்தியமாதிரி அதே மாதிரி வயதான தோற்றத்தில் சால்ட் அண்ட் பெப்பர் லுக்கில் தன் ரசிகர்களுக்கு விருந்து வைக்க காத்திருக்கிறார். அஜித், கமலின் முடிவு மற்ற நடிகர்களும் பின்பற்றுவார்களா என சினிமா விமர்சகர்கள் கேள்வி எழுப்பியுள்ளனர். அதேசமயம் அஜித்தின் சால்ட் அண்ட் பெப்பர் லுக்கை ஏற்றுக் கொண்டாடிய ரசிகர்கள் மற்ற நடிகர்கள் இதே மாதிரி லுக்கை வைத்தால் ஏற்பார்களா? என்று கேள்வி எழுந்துள்ளது.

- Advertisement -spot_img

Trending News