திங்கட்கிழமை, டிசம்பர் 23, 2024

நெல்சனை வளைக்கும் கமல்.. ரஜினி ஃபார்முலாவை ஃபாலோ பண்ணும் உலகநாயகன்

Rajini-Kamal: கமல் இப்போது தயாரிப்பு, நடிப்பு என இரட்டை குதிரையில் சவாரி செய்து கொண்டிருக்கிறார். அது மட்டுமல்லாமல் விரைவில் இவர் தொகுத்து வழங்க இருக்கும் பிக்பாஸ் நிகழ்ச்சியும் ஆரம்பிக்கப்பட இருக்கிறது. இப்படி பம்பரமாக சுழன்று கொண்டிருக்கும் உலக நாயகன் இப்போது நெல்சனை வளைத்து போட்டுள்ளாராம்.

சூப்பர் ஸ்டார், நெல்சன் கூட்டணியில் சமீபத்தில் வெளிவந்த ஜெயிலர் வரலாறு காணாத அளவிற்கு வசூல் வேட்டையாடி வருகிறது. இதற்கு முன்பாக தன்மேல் இருந்த விமர்சனங்கள் அனைத்தையும் தவிடு பொடியாக்கும் வகையில் நெல்சன் இதன் மூலம் அசத்தல் கம்பேக் கொடுத்திருக்கிறார்.

Also read: ரஜினி, கமல் இடத்தை பிடிக்கும் அடுத்த தலைமுறை நடிகர்கள்.. பட்டமே வேண்டாம் என்று ஒதுங்கும் அஜித்

அந்த வகையில் இவரை விமர்சித்தவர்கள் எல்லாம் இப்போது தலையில் தூக்கி வைத்து கொண்டாடி வருகின்றனர். அது மட்டுமல்லாமல் எங்களுக்கு தான் அடுத்த படம் பண்ண வேண்டும் என்று பல முன்னணி பிரபலங்களும் நெல்சனை வளைத்து போட முயற்சி செய்து வருகிறார்களாம்.

அதில் சிவகார்த்திகேயன் ஒரு பக்கம், தெலுங்கு திரையுலக முக்கிய தயாரிப்பாளர்கள் ஒரு பக்கம் என பலரும் நெல்சனுக்கு வலை வீசி கொண்டிருக்கின்றனர். இதனால் பாவம் அவர்தான் எந்த வலையில் சிக்குவது என்று தெரியாமல் முழித்தபடி இருக்கிறார். மேலும் கமலின் நெருங்கிய நண்பரான மகேந்திரனும் நெல்சனை தொடர்பு கொண்டு பேசியிருக்கிறார்.

Also read: நெல்சனை மொத்தமாக குத்தகைக்கு எடுத்த மாறன்.. ஜெயிலரை வைத்து பல நாள் கனவை நிறைவேற்றும் தந்திரம்

ஏனென்றால் நெல்சன் அவருக்கும் நெருங்கிய நண்பர் தான். அந்த வகையில் தற்போது மகேந்திரன் கமலுக்காக ஒரு படம் பண்ணும் படி நெல்சனிடம் கேட்டிருக்கிறாராம். தற்போது இந்தியன் 2 படத்தில் நடித்து முடித்துள்ள கமல் அடுத்ததாக வினோத், மணிரத்தினம் என அடுத்தடுத்த இயக்குனர்களுடன் இணைய இருக்கிறார்.

இந்நிலையில் நெல்சனையும் ராஜ்கமல் நிறுவனம் வளைத்து போட்டிருப்பது ஆச்சரியமாக இருக்கிறது. இதில் கவனிக்க வேண்டிய விஷயம் என்னவென்றால் உலக நாயகன் ரஜினியை ஃபாலோ செய்திருப்பது தான். அதாவது விக்ரம் படத்தை பார்த்து லோகேஷை தன் பக்கம் இழுத்த ரஜினி போல் இப்போது கமலும் நெல்சனை இழுத்துள்ளார். அந்த வகையில் இந்த கூட்டணி பற்றிய அறிவிப்பு விரைவில் வெளிவந்தாலும் ஆச்சரியப்படுவதற்கு இல்லை.

Also read: ஜெயிலரால் வேகம் எடுக்கும் ரஜினி, ஆட்டத்தை ஆரம்பிக்கும் அஜித்.. சிக்கலில் மாட்ட போகும் விஜய்

Trending News