ஞாயிற்றுக்கிழமை, டிசம்பர் 22, 2024

வார்த்தையே இல்லாமல் நவரசத்தையும் கொட்டி ஸ்கோர் செய்த கமல்.. ஒரே ஷாட்டில் கொடுத்த 12 எக்ஸ்பிரஷன்ஸ்

Actor Kamal: கமல் ஒரு பல்கலைக்கழகம் என பலரும் புகழ்ந்து தள்ளும் அளவுக்கு திறமையானவர் என்பதில் சந்தேகம் இல்லை. அதுவும் சினிமாவை ஒருவரால் இந்த அளவுக்கு காதலிக்க முடியுமா என்ற ஆச்சரியத்தையும் நமக்கு கொடுத்தவர் தான் இந்த உலக நாயகன். அப்படிப்பட்ட இவர் ஒரே ஷாட்டில் 12 எக்ஸ்பிரஷன்கள் கொடுத்த ஒரு படமும் இருக்கிறது.

இத்தனைக்கும் அப்போது அவருக்கு 32 வயது தான். அந்த காலகட்டத்திலேயே இவருடைய நடிப்பில் அப்படி ஒரு முதிர்ச்சி இருந்தது. இத்தனை பாராட்டுகளுக்கும் காரணமான அந்த படம் தான் நாயகன். 1987 ஆம் ஆண்டு மணிரத்தினம் இயக்கத்தில் கமலுடன் இணைந்து சரண்யா பொன்வண்ணன், ஜனகராஜ் போன்ற பல நட்சத்திரங்கள் அதில் நடித்திருந்தனர்.

Also read: இந்தியன் 2 வில் வேண்டா வெறுப்பா கமிட் ஆனா உதயநிதி.. ஒத்த படத்தின் மூலமா அடிக்கப் போகும் பெத்த லாபம்

மும்பை தாதாவாகிய வரதராஜா முதலியாரின் வாழ்க்கையை மையப்படுத்தி எடுக்கப்பட்ட அப்படம் மிகப்பெரிய அளவில் வெற்றி பெற்றது. அதில் வேலு நாயக்கராக வரும் கமல் வயதான தோற்றத்திலும் நடித்திருப்பார். அப்போது ஒரு காட்சி இவர் தன் மகளை பல வருடங்களுக்குப் பிறகு சந்திக்கும்படி அமைந்திருக்கும்.

மனஸ்தாபத்தின் காரணமாக பிரிந்து சென்ற மகள் போலீஸ்காரரின் மனைவியாக இருப்பார். இதை எதிர்பார்க்காத கமல் தன் மகளை பார்த்த உணர்ச்சி மிகுதியில் பல முக பாவனைகளை வெளிப்படுத்தி இருப்பார். அதிலும் தன் பேரனை பார்க்க விரும்பும் கமலை அவருடைய மகள் போய்டுங்கப்பா என்று கூறுவார்.

Also read: 42 வருடங்களுக்கு முன்பே மாடர்ன் ரொமான்டிக்காக நடித்த கமல்.. 100வது படத்தில் விழுந்த மரண அடி

அந்த காட்சியில் கமல் ஒரு வார்த்தை கூட பேச மாட்டார். ஆனால் அவருடைய கண்ணும், முகமும் ஆயிரம் உணர்ச்சிகளை வெளிப்படுத்தும். அதிலும் பாசம், ஏமாற்றம், வலி, வேதனை போன்ற 12 பாவனைகளை வெளிப்படுத்தி இருப்பார். இப்போது அந்த காட்சியை பார்த்தாலும் நமக்கு புல்லரிக்கும்.

அதனாலேயே அவர் உலக நாயகனாக கொண்டாடப்பட்டு வருகிறார். இது கமலால் தான் முடியும் என்று சொல்லும் அளவுக்கு அவர் ஒவ்வொரு படத்திலும் தன்னை மெருகேற்றி வருகிறார். அதன் காரணமாகவே தற்போது 68 வயதிலும் இன்றைய தலைமுறைக்கு சரியான போட்டியாக இருக்கிறார் இந்த நாயகன்.

Also read: ஒரே கல்லில் இரண்டு மாங்காய் அடித்த ஷங்கர்.. விரைவில் கமலுக்கு கொடுக்க போகும் ஷாக்

Trending News