கமல் சறுக்க காரணமாய் இருந்த மோசமான ஆட்டிட்யூட்.. திரைக்குப் பின்னால் தயாரிப்பாளருக்கு உலகநாயகன் கொடுத்த வலி

கமல் சினிமா கேரியரை இரண்டு கட்டங்களாக பிரிக்கலாம் அதாவது விக்ரம் படம் ரிலீசுக்கு பின் மற்றும் முன் என இரண்டு பிரிவுகளாக வித்யாசப்படுத்தலாம். சினிமாவில் கமலின் செகண்ட் இன்னிங்ஸ்சை தூக்கி நிறுத்தியது லோகேஷ் கனகராஜின் விக்ரம் படம் என்று கூறலாம்.

200 கோடிகள் செலவில் எடுக்கப்பட்ட விக்ரம் படம் உலக அளவில் 560 கோடிகள் வசூலித்து கமலின் ராஜ் கமல் பிலிம்ஸ் தயாரிப்பு நிறுவனத்திற்கு கொள்ளை லாபம் பெற்று கொடுத்தது. இந்த லாபத்தினால் தன்னுடைய நிறுவனத்தை புதுப்பித்தார் கமல். நிறைய படங்கள் தயாரிக்கவும் அக்ரிமெண்ட் போட்டுள்ளார்.

லோகேஷின் இந்த படத்திற்கு முன் கமல் வாங்கிய சம்பளம் 70 கோடிகள் தான். இந்த படம் பிளாக்பஸ்டர் ஹிட் ஆன பிறகு கமல் தன்னுடைய சம்பளத்தை 120 கோடிகளாக மாற்றிவிட்டார் இப்பொழுது கதாபாத்திரத்திற்கு ஏற்ப 140 கோடிகளுக்கு மேல் வாங்குகிறார். பிரபாஸின் கல்கி படத்தில் வில்லனாக நடிக்க அவரது சம்பளம் 150 கோடிகள்.

சமீபத்தில் இந்தியன் 2 பட ப்ரோமோஷனுக்காக பறந்து பறந்து வேலை செய்தார் கமலஹாசன். 70 வயதில் இப்படி உற்சாகமாக இறங்கி அடிக்கிறாரே என கமலை அனைவரும் தூக்கி வைத்து கொண்டாடினார்கள். ஆனால் அதற்குப் பின்னால் தயாரிப்பாளர் மட்டும் பெரும் சங்கடத்தை அனுபவித்துள்ளார்.

திரைக்குப் பின்னால் தயாரிப்பாளருக்கு உலகநாயகன் கொடுத்த வலி

ஹைதராபாத், கொச்சின், மும்பை என அனைத்து இடங்களுக்கும் கமல் செல்லும் போதெல்லாம் தயாரிப்பாளருக்கு கடும் வலியை கொடுத்துள்ளார். கமல் தனக்கென்று 10 ஜிம் பாய்ஸ் வேண்டுமென்று கேட்டுள்ளார். அவர்களை தான் செல்லும் இடத்திற்கு முன்னதாக அனுப்பி எல்லாத்தையும் சீர் படுத்திக் கொள்வாராம்.

அது மட்டும் இன்றி எல்லா இடத்திற்கும் தனி விமானத்தில் தான் செல்வாராம். சென்ற இடத்தில் ஒரு மணி நேரம் இருந்தால் கூட பைவ் ஸ்டார் ஹோட்டல் தானாம். இது போக பல கோடிகள் சம்பளம். இப்படி சென்ற இடமெல்லாம் கல்லாவை மனதில் வைத்து வேலையை காட்டி இருக்கிறார் ஆண்டவர்.

Next Story

- Advertisement -