புதன்கிழமை, ஜனவரி 22, 2025

Kamal : குட்டையை களரிவிட்ட சுசித்ராவால் சட்ட சிக்கலில் மாட்டும் ஆண்டவர்.. யாரு வம்பு தும்புக்கும் போலையாடா!

கடந்த இரண்டு நாட்களாக இணையத்தையே அல்லோபடுத்திய ஒன்று தான் சுசித்ராவின் பேட்டி. அதாவது தனது கணவர் ஆண்மையில்லை என்றும், போதை சம்பந்தப்பட்ட பொருட்களையும் பயன்படுத்துவதாக குற்றச்சாட்டு வைத்தார்.

அதோடு தனுஷ், திரிஷா போன்ற பிரபலங்களை பற்றியும் பேசி இருந்தார். இந்நிலையில் கமல் கேளிக்கை விருந்துகளில் கொகை** என்ற போதை பொருளை பயன்படுத்தி வருவதாக சுசித்ரா கறியிருந்தார். குட்டையை குழப்பி விட்ட இவரால் இப்போது ஆண்டவர் சிக்கலில் மாட்டியிருக்கிறார்.

அதாவது தமிழ்நாட்டு பாஜக துணை தலைவரான நாராயணன் திருப்பதி தனது ட்விட்டர் தளத்தில் ஒரு பதிவு போட்டிருக்கிறார். பிரபல ஊடகம் ஒன்றிக்கு பேட்டி கொடுத்த சுசித்ரா நடிகர் மற்றும் மக்கள் நீதி மையத்தின் தலைவருமான கமல்ஹாசன் நடத்தும் கேளிக்கை விருந்துகளில் வெள்ளி தாம்பாளத்தில் போதை சம்பந்தமான பொருள் பயன்படுத்துவதாக சாதாரணமாக கூறியிருக்கிறார்.

நாராயணன் திருப்பதி போட்ட பதிவு

narayanan-thiirupathy
narayanan-thirupathy

மேலும் சமீபத்தில் பெண் போலீசார் குறித்து பேசியதற்கு பேட்டி எடுத்தவரையும் கைது செய்த காவல்துறையினர் சுசித்ரா போதைப் பொருள் குறித்து பேசிய விஷயங்களை அலட்சிய படுத்தாமல் விசாரணை கொள்ள வேண்டும்.

சுசித்ரா கூறியதில் தவறு இருந்தால் அவர் மீதும் கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும். இதில் சுசித்ராவின் முன்னாள் கணவர் கார்த்திக் குமார் மற்றும் கமலஹாசன் போன்றவரையும் விசாரித்து போதைப்பொருள் எங்கிருந்து யார் மூலம் விநியோகப்படுத்தப்படுகிறது என்பதை கண்டுபிடித்து நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும் மிகச் சிறந்த நடிகர் மற்றும் அரசியல் கட்சி தலைவருமான கமல் இந்த விவகாரம் குறித்து வெளிப்படையாக பேச வேண்டும். சுசித்ரா கூறியதில் உண்மை இல்லை என்றால் மறுப்பு தெரிவிப்பதோடு மட்டுமல்லாமல் அவர் மீது புகார் எடுக்க வேண்டும் என கமலுக்கு வேண்டுகோள் வைத்துள்ளார் நாராயணன்.

யாரு வம்பு தும்புக்கும் போகாமல் இருந்த கமலை இப்போது சுசித்ரா சிக்கலில் மாட்டியிருக்கிறார். மேலும் இந்த வீடியோவால் இப்போது பிரச்சனை பூதாகரம் எடுத்த நிலையில் கமல் போன்றோரை போலீசார் விசாரிக்க வாய்ப்பு இருக்கிறது.

Trending News