வெள்ளிக்கிழமை, ஜனவரி 24, 2025

ரவீனாவுக்கு சர்ப்ரைஸ் கொடுத்த ஆண்டவர்.. திடீர் என்ட்ரியான உறவு, மணிக்கு சாதகமா, பாதகமா.?

Biggboss 7: இந்த வாரம் பிக்பாஸ் வீட்டுக்கு போட்டியாளர்களின் ரத்த சொந்தங்கள் அனைவரும் வருகை தந்திருந்தனர். இதனால் கண்ணீர் கடலில் தத்தளித்த போட்டியாளர்கள் இப்போதுதான் இயல்பு நிலைக்கு திரும்பி இருக்கின்றனர். ஆனால் இதில் ரவீனாவின் நிலை தான் அந்தோ பரிதாபமாக இருந்தது.

தன் அம்மாவுக்காக ஆசையுடன் காத்திருந்த அவருக்கு அதிர்ச்சி வைத்தியம் கொடுப்பது போல் வந்தார் அமெரிக்கா ஆன்ட்டி. வந்தவர் ஏதாவது சம்பவம் செய்ய வேண்டுமே என்ற எண்ணத்தில் மணியை இஷ்டத்துக்கு பேசி ரோஸ்ட் செய்தார். அப்போது கூட ரவீனா வாயை மூடிக்கொண்டு அமைதியாக தான் இருந்தார்.

Also read: ஆண்டவரே சொன்னாலும் நாங்க இப்படித்தான்.. பிக்பாஸில் ஆட்டிடியூட் காட்டிய 5 பிரபலங்கள்

இதோடு போனால் கூட பரவாயில்லை கோட் வேர்ட் ஒன்றை சொல்லி பிக்பாசிடமும் ஆன்ட்டி மாட்டிக் கொண்டார். அதை தொடர்ந்து அவர் வெளியேற்றப்பட்டதை அடுத்து ரவீனா தன் அம்மாவை பார்க்க முடியாத ஏக்கத்தில் சுற்றிக் கொண்டிருந்தார்.

அவருக்கு சர்ப்ரைஸ் தரும் விதமாக தற்போது ஒரு ப்ரோமோ வெளியாகி உள்ளது. அதில் கமல் ஸ்டோர் ரூமுக்கு சென்று பாருங்கள் என ரவீனாவிடம் கூறுகிறார். அதை தொடர்ந்து போட்டியாளர்கள் அனைவரும் அங்கு எதிர்பார்ப்போடு ஓடுகின்றனர்.

Also read: என்னது மணி அண்ணனா.! பொம்பள புத்தியை காட்டி ரவீனா ஆடும் டபுள் கேம்

எதிர்பார்த்தது போல் அங்கு ரவீனாவின் அம்மா இருக்கிறார். அதை அடுத்து அம்மா மகளின் பாச பிணைப்பு காட்டப்படுகிறது. இதுதான் இன்றைய எபிசோடில் காட்டப்பட இருக்கிறது. ஒரு பக்கம் ரவீனாவுக்கு இது ஆறுதலாக இருந்தாலும் மறுபக்கம் மணிக்கு பக் என்றுதான் இருக்கும்.

ஏற்கனவே ஆன்ட்டி கண்டபடி ரோஸ்ட் செய்த நிலையில் ரவீனாவின் அம்மா என்ன செய்யப் போகிறார் என்ற எதிர்பார்ப்பு ரசிகர்களுக்கும் இருக்கிறது. ஆனால் மணி மீது எந்த தவறும் இல்லை என கடந்த சில நாட்களாகவே சோசியல் மீடியாவில் கருத்துக்கள் பரவி வருகிறது. இது எல்லாவற்றிற்கும் முற்றுப்புள்ளி வைக்கும் விதமாக ரவீனா அம்மாவின் என்ட்ரி இருக்கும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

Trending News