வெள்ளிக்கிழமை, ஜனவரி 10, 2025

ஒரே படத்தில் கமலஹாசனிடம் 13 முத்தங்கள் வாங்கிய ஒரே நடிகை இவர்தான்.. மாஸ் படத்தில் அப்படியொரு ரொமான்ஸ்!

கமல்ஹாசன் என்றாலே அனைவருக்கும் அவரது நடிப்பு ஞாபகம் வருகிறதோ இல்லையோ நடிகைகளுடன் படங்களில் அவர் செய்யும் ரொமான்ஸ் காட்சிகள் தான் அதிகம் ஞாபகத்திற்கு வரும். அதுவும் முத்தக் காட்சிகள் தான்.

தமிழ் சினிமாவில் கமலஹாசனுக்கு முத்த நாயகன் என்ற அடைமொழியும் உள்ளது. தன்னுடன் நடிக்கும் நடிகைகளுடன் ரொமான்ஸ் காட்சிகளில் குறைந்தது ஒரு முத்தக் காட்சியாவது நடித்து விடுவார். அதுவும் பெரும்பாலும் உதட்டு முத்தக்காட்சிகள் தான்.

காட்சிகள் தத்ரூபமாக வரவேண்டும் என்பதற்காக அப்படி செய்வார் என்கிறார்கள். ஆனால் பார்ப்பவர்களுக்கு அவர் வேண்டுமென்றே நடிகைகளை இழுத்து பிடித்து முத்தம் கொடுப்பது போலவே சித்தரிக்கப்படுவது வேதனைதான்.

கமலஹாசன் தன்னுடன் நடித்த பல நடிகைகளுக்கு முத்தங்கள் கொடுத்திருந்தாலும் ஒரே ஒரு நடிகைக்கு மட்டும் ஒரு படத்தில் 13 முத்தங்கள் கொடுத்து மூச்சுமுட்ட வைத்துள்ள செய்தி கிடைத்துள்ளது.

கமலின் சினிமா கேரியரில் ஏகப்பட்ட சர்ச்சைகளுக்கு நடுவில் வெளியாகி மாபெரும் வெற்றி பெற்ற திரைப்படம் விருமாண்டி. இந்த படத்தில் அதிகளவு ஆக்சன் காட்சிகள் இருந்தாலும் அதையே ஓரம் கட்டும் அளவுக்கு ரொமான்ஸ் காட்சிகள் அமைந்தது.

அந்த படத்தில் கமல்ஹாசனுக்கு ஜோடியாக நடித்த அபிராமியை பாடாய் படுத்தி எடுத்திருப்பார் கமல் ஹாசன். மேலும் கமல்ஹாசன் ஒரு நடிகைக்கு அதிக முத்தம் கொடுத்ததும் இந்த படத்தில்தான் என கருத்துக் கணிப்புகள் கூறுகின்றன.

kamal-abirami-cinemapettai
kamal-abirami-cinemapettai

Trending News