பல வருட பாலிவுட் சாதனையை முறியடித்த விக்ரம்.. இண்டஸ்ட்ரிக்கு ஹிட் கொடுத்த கமல்!

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் உலகநாயகன் கமலஹாசன் நடித்திருக்கும் விக்ரம் திரைப்படம் சர்வதேச அளவில் வெறும் 17 நாட்களில் ரூபாய் 350 கோடி வசூலை வாரி குவித்திருக்கிறது. இந்த படத்தில் கதாநாயகி இல்லாமல், கிராபிக்ஸ் காட்சிகளும் பெரிதாக காட்டப்படா விட்டாலும் ரசிகர்களை அதிகளவில் ஈர்த்திருக்கிறது.

அத்துடன் விக்ரம் படத்தில் விஎஃப்எக்ஸ் காட்சிகள் மற்றும் நகைச்சுவை காட்சிகளும் பெரிய அளவில் இடம் பெறாத போதிலும் இந்த அளவிற்கு ரசிகர்களை கவர்ந்திருப்பது திரையுலகையே ஆச்சரியப்படுத்துகிறது. அதுமட்டுமின்றி விக்ரம் படத்தின் வசூல் சாதனையை கோலிவுட் தற்சமயம் தலையில் தூக்கிக் கொண்டாடும் வகையில் பின்னி பெடல் எடுத்திருக்கிறது.

இதனால் விக்ரம் படம் தான் இண்டஸ்ட்ரி ஹிட், நம்பர் ஒன் ஹிட் என சோசியல் மீடியாவில் திரை விமர்சகர்கள் இந்த இரண்டு நாட்களாக இந்த வார்த்தையை அடிக்கடி சொல்லி விக்ரம் படத்தை கொண்டாடுகின்றனர். விக்ரம் படத்திற்கு மும்பு ராஜமௌலியின் பாகுபலி 2 தமிழகத்தில் 152 கோடி வசூல் சாதனை புரிந்த தமிழகத்தில் அதிக வசூலை ஈட்டிய படத்தில் முதலிடத்தை பெற்ற நிலையில், வெறும் 17 நாளில் விக்ரம் திரைப்படம் 160 கோடி வசூல் செய்து அந்த சாதனையை முறியடித்திருக்கிறது.

மேலும் 120 கோடி பட்ஜெட்டில் உருவான விக்ரம் படம் இதுவரை 350 கோடி வசூலை சர்வதேச அளவில் குவித்திருக்கும் நிலையில், வசூல் நிறைவடையும்போது நிச்சயம் 400 கோடியை எட்டும். மேலும் ஓடிடி, சாட்டிலைட் உரிமை என இதிலிருந்து மட்டும் 400 கோடி லாபம் கிடைக்கும்.

இதுவரை தெலுங்கில் பாகுபலி 2, ஹிந்தியில் தங்கல், கன்னடத்தில் கேஜிஎப் 2, மலையாளத்தில் புலி முருகன் போன்ற அதிக லாபம் ஈட்டிய படங்களின் வரிசையில் தமிழில் விக்ரம் படமும் இண்டஸ்ட்ரியல் ஹிட் படமாக இடம்பிடித்திருக்கிறது.

இதனால் கமலஹாசன் இதுவரை நடித்து வெளியான எல்லா படங்களையும் காட்டிலும் விக்ரம் திரைப்படம், இண்டஸ்ட்ரிக்கு மிகப்பெரிய ஹிட் கொடுத்திருக்கும் படம் என்ற மிகப்பெரிய பெருமையை அவருக்கு தேடித் தந்ததால் சந்தோசத்தில் திளைக்கிறார்.