சனிக்கிழமை, ஜனவரி 25, 2025

இந்த வாரம் கமல் வீட்டை விட்டு துரத்த போகும் பொம்மை போட்டியாளர்.. ட்விஸ்ட் வைக்கும் பிக்பாஸ் ஓட்டிங்

Biggboss 7 Voting: பிக்பாஸ் வீட்டை விட்டு கடந்த வாரம் கானா பாலா வெளியேறி இருந்தார். அதை தொடர்ந்து இந்த வாரம் யார் வெளியேற போகிறார்கள் என்ற எதிர்பார்ப்பு ஆடியன்ஸ்க்கு அதிகமாகவே இருக்கிறது. அந்த வகையில் இந்த வாரம் மொத்தமாக எட்டு போட்டியாளர்கள் நாமினேஷனில் சிக்கி உள்ளனர்.

அதன்படி தற்போதைய ஓட்டிங் நிலவரத்தில் அர்ச்சனா தான் முன்னிலையில் இருக்கின்றார். தொடர்ந்து ரசிகர்களின் ஆதரவை பெற்று வரும் இவர் எப்போது நாமினேஷனில் சிக்கினாலும் அதிகபட்ச ஓட்டுகளை பெற்று காப்பாற்றப்பட்டு விடுகிறார்.

Also read: என்ன தரையில பேசினதெல்லாம் திரையில வருது.. பிக்பாஸ் மைண்ட் வாய்ஸை கேட்ச் செய்த விஷ்ணு

அதற்கு அடுத்தபடியாக பிக்பாஸ் ராஜமாதா விசித்ரா இருக்கிறார். இவருக்கும் ரசிகர்கள் தாராளமாக வாக்குகளை வழங்கியுள்ளனர். அதற்கு அடுத்தடுத்த இடங்களில் மணி, ரவீனா, பிராவோ இருக்கின்றனர். இதில் பிராவோ வீட்டில் இருக்கும் இடம் தெரியாமல் இருக்கிறார்.

ஆனாலும் அவருக்கு ஓட்டுகள் வந்திருப்பது ஆச்சரியம் தான். அதற்கு அடுத்த நிலையில் தான் மாயா இருக்கிறார். பிக்பாஸ் நிகழ்ச்சியின் கடுமையான போட்டியாளராக இருக்கும் இவர் ரசிகர்கள் மத்தியில் வெறுப்பை சம்பாதித்துள்ளார். அதனாலேயே இப்போது அவருக்கு குறைவான ஓட்டுகள் வந்து கொண்டிருக்கிறது.

Also read: ஒன்னு கூடி ஒப்பாரி வைக்கும் ஹவுஸ் மேட்ஸ்.. TRP-க்காக இதெல்லாம் ஒரு டாஸ்க்கா பிக்பாஸ்

இதில் கடைசி இரண்டு இடங்களில் அக்ஷயா மற்றும் பூர்ணிமா இருக்கின்றனர். இதில் அக்ஷயாவுக்கு 18,928 ஓட்டுகள் கிடைத்திருக்கிறது. அதே போன்று பூர்ணிமாவுக்கு 18,576 ஓட்டுகள் வந்திருக்கிறது. அப்படி பார்த்தால் இந்த வாரம் பிக்பாஸ் வீட்டை விட்டு பூர்ணிமா தான் வெளியேற வேண்டும்.

ஆனால் விஜய் டிவி அக்ஷயாவை தான் வெளியே அனுப்புவார்கள் என்பது அனைவரும் அறிந்தது தான். ஏனென்றால் பிக் பாஸ் வீட்டில் எந்த கன்டென்ட்டும் கொடுக்காமல் பொம்மை போல் இருப்பது இவர் மட்டும்தான். அந்த வகையில் இந்த வாரம் கமல் இவரைத்தான் வீட்டை விட்டு அனுப்ப இருக்கிறார்.

biggboss-voting
biggboss-voting

Trending News