திங்கட்கிழமை, ஜனவரி 6, 2025

22 வருடங்களுக்குப் பிறகு மிரட்ட வரும் கமல்.. சண்டையை மறந்து கல்லா கட்ட தயாரான முதலாளி

Actor Kamal: உலகநாயகன் இப்போது அடுத்தடுத்த படங்களில் பிஸியாகி இருக்கிறார். இந்தியன் 2 படத்தில் நடித்து முடித்துள்ள அவர் அடுத்ததாக வினோத், மணிரத்தினம் என வெற்றி இயக்குனர்களுடன் கைகோர்க்க இருக்கிறார். அதில் சமீபத்தில் அவருடைய தக் லைஃப் வீடியோ வெளியாகி பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி இருந்தது.

இந்நிலையில் 22 வருடங்களுக்கு பிறகு அவருடைய ஆளவந்தான் படம் மீண்டும் ரீ ரிலீஸ் ஆக இருக்கிறது. கடந்த 2001 ஆம் ஆண்டு சுரேஷ் கிருஷ்ணா இயக்கத்தில் சைக்காலஜிக்கல் திரில்லர் படமாக இது வெளியானது. இதில் கமல் விஜயகுமார், நந்தகுமார் என இரு வேடங்களில் நடித்திருப்பார்.

அதில் வில்லனாக வரும் நந்தகுமார் கேரக்டர் பயங்கர மிரட்டலாக இருக்கும். அதற்காக கமல் தன்னுடைய கெட்டப்பையே மாற்றி அசத்தியிருப்பார். ஆனால் படம் எதிர்பார்த்த லாபத்தை கொடுக்கவில்லை. இதற்கு முக்கிய காரணம் ஏழு கோடி பட்ஜெட்டில் தொடங்கப்பட்ட ஆளவந்தான் ரிலீஸ் ஆகும் போது அதைவிட மூன்று மடங்கு பட்ஜெட் அதிகரித்து இருந்தது.

Also read: சம்பள விஷயத்தில் கரார் காட்டும் பிரதீப்.. கழட்டிவிட்ட கமல்

இதுவே தயாரிப்பாளரான தாணுவுக்கும் கமலுக்கும் இடையில் ஒரு மனகசப்பை ஏற்படுத்தி இருந்தது. மேலும் போட்ட காசை எடுக்க முடியாததோடு படத்தில் அதிக வன்முறையையும் கமல் காட்டியது தயாரிப்பாளருக்கு அவ்வளவு உவப்பாக இல்லை. இதுதான் அவர்களுக்கிடையேயான பிரச்சனைக்கு காரணம்.

ஆனால் 22 வருடங்களுக்குப் பிறகு இப்படத்தை அவர் மீண்டும் வெளியிட தயாராகி உள்ளார். இதற்கு முக்கிய காரணம் சமீபத்தில் வேட்டையாடு விளையாடு மீண்டும் வெளியாகி ரசிகர்களால் கொண்டாடப்பட்டது. அதனாலேயே தாணு ஆளவந்தானை வெளியிடும் முயற்சியில் இருக்கிறார்.

ஏனென்றால் இப்படம் வசூல் ரீதியாக வெற்றி பெறவில்லை என்றாலும் விமர்சன ரீதியாக பலருக்கும் பிடித்த படம் தான். அந்த வகையில் ஆளவந்தான் இப்போது ஆயிரம் தியேட்டர்களில் வெளியாக இருக்கிறது. அதற்கான வேலைகள் தற்போது நடந்து வரும் நிலையில் தாணு இதன் மூலம் கல்லா கட்டவும் தயாராகிவிட்டார்.

Also read: பல நாள் திருடன் ஒரு நாள் அகப்படுவான்.. மாட்டிகிட்டியே பங்கு, நிக்சனை ரோஸ்ட் செய்த ஆண்டவர்

Trending News