Amaran: கடந்த வருடம் வெளிவந்த படங்களில் எதார்த்தமாகவும் மனதை தொடும் விதமாகவும் அமைந்தது சில படங்கள் தான். அதில் அமரன் படத்திற்கு பலத்த வரவேற்பு கிடைத்தது.
ராஜ்குமார் பெரியசாமி இயக்கத்தில் கமல் தயாரிப்பில் சிவகார்த்திகேயன், சாய்பல்லவி இப்படத்தில் நடித்திருந்தனர். மேஜர் முகுந்த் வரதராஜனின் வாழ்க்கை பதிவு தான் இப்படம்.
இதில் ஜிவி பிரகாஷின் இசையில் பாடல்களும் சாய் பல்லவியின் நடிப்பும் சிவகார்த்திகேயனின் ஆக்சனும் வேற லெவலில் இருந்தது. அதனாலயே பார்வையாளர்கள் படத்தை தலையில் தூக்கி வைத்துக் கொண்டாடினர்.
கடந்த வருடம் வெளிவந்த படங்களில் 100 நாட்கள் ஓடி சாதனை படைத்த படமும் இதுதான். அதன் வெற்றி விழாவை பிரமாண்டமாக நடத்துவதற்கு தற்போது படக்குழு திட்டமிட்டுள்ளது.
அமரன் 100 நாள் வெற்றி கொண்டாட்டம்
ஆனால் அனைவரும் நினைத்தது மாதிரி நேரு விளையாட்டு அரங்கில் இந்த விழா நடக்கவில்லை. அதன் மாறாக பிரபல கல்லூரியில் நடக்க இருக்கிறது.
ஏ ஐ பற்றிய படிப்புக்காக வெளிநாடு சென்றுள்ள கமல் இதற்காக வருவார் என்ற தகவலும் கசிந்து உள்ளது. அப்போது மேடையில் சிவகார்த்திகேயன் எதிர்பார்த்தபடி கட்டிப்பிடி வைத்தியமும் செய்வார்.
ஏனென்றால் சிவகார்த்திகேயன் மேடையில் ஒரு முறை இந்த படம் நல்லா போயிட்டு இருக்கு. கமல் சார் ஊர்ல இருந்து வந்த உடனே கொடுக்கிற ஹக் தான் எனக்கு பெரிய சந்தோஷம் என தெரிவித்து இருந்தார்.
அதன்படி உண்மையான வெற்றியை பதிவு செய்த இந்த பட குழுவினருக்கு சோசியல் மீடியாவில் வாழ்த்துக்கள் குவிந்து வருகிறது.