வியாழக்கிழமை, ஜனவரி 16, 2025

உண்மை சம்பவத்தை மீண்டும் கையில் எடுக்கும் H.வினோத், கமல் கூட்டணி.. பிரம்மாண்டமாக உருவாகும் பயோபிக் கதை

KH233 movie update: சினிமா ரசிகர்களிடையே தற்போது பயங்கர ட்ரெண்டில் இருப்பவர் தான் உலக நாயகன் கமலஹாசன். இதற்கு மிக முக்கிய காரணம் அவருடைய சமீபத்திய வெற்றி படமான விக்ரமும், மேலும் அவர் கைவசம் இருக்கும் நான்கு படங்களும். இந்தியன் 2, ப்ராஜெக்ட் கே , KH233, KH234 போன்ற படங்கள் அடுத்தடுத்து கமலுக்கு ரிலீசாக இருப்பதால் இப்போது எங்கு திரும்பினாலும் இவர் பேச்சு தான்.

இதில் இந்தியன் 2 வரும் ஏப்ரல் மாதம் ரிலீஸ் ஆக இருக்கும் நிலையில், ப்ராஜெக்ட் கே பற்றிய அதிகாரப்பூர்வமான அறிவிப்பை அந்த பட குழுவும் அறிவித்துவிட்டது. இந்நிலையில் சமீபத்தில் கமல் தன்னுடைய 233 வது படத்தில் இயக்குனர் எச் வினோத்துடன் இணைய இருப்பதாகவும் அதிகாரப்பூர்வ அறிவிப்புகள் வெளியாகி இருந்தன. தற்போது இந்த படத்தின் திரைக்கதை பற்றிய தகவலும் வெளியாகியிருக்கிறது.

Also Read:சறுக்கிய நேரத்தில் கை கொடுத்த கமல்.. ஆண்டவரை இம்ப்ரஸ் செய்த வினோத், KH 233 உருவான சீக்ரெட்

ஏற்கனவே இவர்களது கூட்டணியில் உருவாகும் இந்த படம் விவசாயத்தை மையமாகக் கொண்ட கதை காலத்தைக் கொண்டது என தகவல்கள் வெளியான நிலையில், தற்போது இது ஒரு பயோபிக் பணமாக இருக்கலாம் என தெரிகிறது. பாரம்பரிய விதை நெல்களை காக்கும் பணிக்காகவே தன்னை அர்ப்பணித்துக் கொண்ட நெல் ஜெயராமனின் வாழ்க்கை கதையைத்தான் படமாக்க இருப்பதாக சொல்லப்படுகிறது.

நெல் பாதுகாப்பு மற்றும் விவசாயத்திற்காக தன் வாழ்க்கையே அர்ப்பணித்த நெல் ஜெயராமன் கடந்த 2018 ஆம் ஆண்டு மரணமடைந்தார். ஒருவேளை அவருடைய பயோபிக் தான் இந்த படம் என்றால் கண்டிப்பாக கமலஹாசன் ஜெயராமனின் கதாபாத்திரத்தில் நடிக்கவே அதிக வாய்ப்பு இருக்கிறது. இது மட்டும் இல்லாமல் மேலும் ஒரு கதைகயும் தற்போது டிஸ்கஷனில் இருக்கிறதாம்.

Also Read:சிவகார்த்திகேயனுக்கு வில்லனாகும் கமல் பட நடிகர்.. ஆண்டவரால் கம்பேக் கொடுக்கும் பாலிவுட் ஹீரோ

இன்டர்நேஷனல் ஜெர்னலிசம் மற்றும் பைனான்சியல் தொடர்பான ஒரு கதையும் தேர்வுக்காக வினோத் வைத்திருப்பதாக சொல்லப்படுகிறது. இந்த இரண்டு ஸ்கிரிப்ட்டில் எந்த ஒன்றை கமலஹாசன் ஓகே சொல்கிறாரோ, அதற்கு அடுத்து படப்பிடிப்பு வேலைகளை உடனே ஆரம்பிக்க படக்குழுவும் திட்டமிட்டு இருக்கிறது.

இந்தப் படத்தை ஒரு குறுகிய காலகட்டத்திலேயே எடுத்து முடிக்க கமல் மற்றும் படக்குழு பிளான் போட்டு இருக்கிறது. கமலுக்கு அடுத்தடுத்து ப்ராஜெக்ட் கே மற்றும் 234 வது படப்பிடிப்பு வேலைகளுக்கான திட்டங்களும் இருப்பதால் குறிப்பிட்ட கால்ஷீட்டில் இந்த படத்தை முடிக்க இருக்கிறார். வினோத்திடம் இருக்கும் இந்த இரண்டு ஸ்கிரிப்டுமே நல்ல கதை என்பதால் குறைவான நாட்களில் எடுக்கப்பட்டாலும் இந்த படம் கண்டிப்பாக ரசிகர்களிடையே மிகப்பெரிய வரவேற்பை பெறும்.

Also Read:பெயரே தெரியாமல் அழகில் மயக்கும் 5 ஆன்ட்டிகள்.. கமல் செய்த சூழ்ச்சியை சுக்கு நூறாக்கிய ஆஷா சரத்

Trending News