வெள்ளிக்கிழமை, டிசம்பர் 27, 2024

ஸ்ரீதேவி எனக்கு தங்கச்சி மாதிரி.. முழு பூசணிக்காயை சோற்றில் மறைத்த கமல்

தமிழ் சினிமாவின் பிரபல ஜோடியாக புகழ்பெற்றவர்கள் நடிகர் கமல்ஹாசனும் நடிகை ஸ்ரீதேவியும். இவர்கள் இருவரும் இணைந்து பல வரலாற்று சிறப்புமிக்க படங்களை கொடுத்துள்ளனர். இவர்கள் இருவருக்கும் ரசிகர்கள் கூட்டம் அந்த காலத்தில் இருந்தே இருக்கிறது.

கமல், ஸ்ரீதேவி இணைந்து நடித்த சகலகலா வல்லவன், 16 வயதினிலே, வறுமையின் நிறம் சிவப்பு, மூன்றாம் பிறை, வாழ்வே மாயம் போன்ற அனைத்து படங்களுமே சூப்பர் டூப்பர் ஹிட். இவர்களின் கெமிஸ்ட்ரி அதிகமாக வேலை செய்ததால் உண்மையிலேயே இவர்களை ஜோடியாக ரசிகர்களால் பார்த்தனர்.

ஆனால் திரைக்கு வெளியே இரண்டு பேரும் நல்ல நண்பர்கள் மற்றும் குடும்ப நண்பர்கள் மட்டுமே. அவர்களை சுற்றி பல கிசுகிசுக்கள் ஆரம்ப காலத்திலேயே தொடங்கிவிட்டது. ஏன் இன்றும் கூட சிலர் இருவரும் நெருக்கமாக இருந்தனர் என கிளப்பி வருகின்றனர். இதனை கமலும் ஸ்ரீதேவியும் பெரிதாக கண்டு கொள்ளாமல் அப்படியே போறபோக்கில் விட்டனர்.

ஒருமுறை கமலஹாசன் அளித்த பேட்டியில் ஒரு திடுக் தகவலை பகிர்ந்துள்ளார். அதாவது ஸ்ரீதேவியின் அம்மா ராஜேஸ்வரி தனது மகளை திருமணம் செய்து கொள்ளுமாறு கேட்டதாகவும் ஆனால் கமலஹாசன் அதனை மறுத்ததாக கூறினார்.

மேலும் திரும்பத் திரும்ப கமலஹாசனை  ஸ்ரீதேவி அம்மா கேட்டதால் நாம் அனைவரும் ஒரே குடும்பமாக பழகி விட்டோம். குடும்பத்தில் உள்ள ஒருவரை மணந்து கொள்வது சரியல்ல என்று கூறிவிட்டாராம்.

ஆரம்பத்தில் ஸ்ரீதேவியை 13 வயதில் சந்தித்துள்ளார். அதன்பின் மூன்று முடிச்சு படத்தில் நடித்துள்ளார். அந்த நேரத்தில் கமலஹாசன் மிகப் பெரிய நடிகராக இருந்தார். ஸ்ரீதேவி கமலஹாசனை சார் என்று தான் அழைப்பாராம். இந்நிலையில் பல வருடங்களுக்குப் பிறகு ஸ்ரீதேவி மறைந்த பின்னரும் இவர்கள் இருவருக்குள்ளும் உள்ள வதந்தியை கிளப்பி விட்டு வேடிக்கை பார்க்கிறார்கள் சிலர்.

kamal
kamal

ஏற்கனவே ஸ்ரீதேவி பற்றி பேசும் போது மிகவும் வேதனை அடைந்து கமல் கூறியதாவது, ‘ஸ்ரீதேவி எனக்கு தங்கை போன்றவர். தேவியின் அம்மா எனக்கு அவர் கையாலேயே சாப்பாடு வழங்கியிருக்கிறார். இதுபோன்ற தேவையில்லாத வதந்திகள் கிளப்ப வேண்டாம் என்று எச்சரிக்கும் தொனியில் பேசியுள்ளார். அத்துடன் அது சம்பந்தப்பட்ட விஷயத்திற்கும் ஒரு முற்றுப்புள்ளி வைத்தார்.

Trending News