திங்கட்கிழமை, டிசம்பர் 23, 2024

பெரிய இயக்குனர்களுக்கு கமல் கொடுத்த 5 தரமான ப்ளாக்பஸ்டர்ஸ்.. ஒரே முறையோடு நிறுத்திக் கொண்ட உலகநாயகன்

Kamal Haasan: தமிழ் சினிமாவில் 80களில் இருந்து டாப்பில் இருப்பவர் தான் உலகநாயகன். இவர் படைப்புகளில் வெளிவந்த திரைப்படங்கள் ஏராளமானது. அதில் முக்கியமான இயக்குனர்களுக்கு நடித்துக் கொடுத்த மாபெரும் திரைப்படங்கள் 5 பற்றி பார்க்கலாம். இந்த திரைப்படங்கள் அனைத்தும் தனது தனித்துவமான கதை அமைப்புகளால் திரையரங்குகளையே தெறிக்க வைக்கும் அளவிற்கு நல்ல வரவேற்பு கிடைத்த படங்கள் ஆகும்.

மணிரத்தினம்- நாயகன்: மணிரத்தினம் இயக்கத்தில் உலகநாயகன் கமல்ஹாசன் கூட்டணியில் வெளிவந்த முதல் படம் தான் நாயகன். இத்திரைப்படம் அந்த காலகட்டத்தில் பாம்பேயில் இருந்த “வரதராஜன் முதலியார்” என்பவரை ரோல் மாடலாக கொண்டு எடுத்த கேங்ஸ்டர் திரைப்படம். சுமார் 214 நாட்கள் வெற்றிகரமாக ஓடி வசூலை அள்ளி குவித்தது. தனக்கென ஒரு அடையாளத்தையும் உருவாக்கியது. திரைப்படத்திற்கு சிறந்த தேசிய நடிகர், சிறந்த சினிமா போட்டோகிராபி போன்ற விருதுகளை தட்டி தூக்கியது. ஆல் டைம் 100 சிறந்த திரைப்படம் வரிசையில் திரைப்படம் இடம் பிடித்து உள்ளது.

Also Read:மாமன்னனுக்கு முன்னரே வடிவேலு சம்பவம் செய்த 5 படங்கள்.. நாசரிடம் கருப்பட்டியாக வாங்கிய அடி

சங்கர்-இந்தியன்: சங்கர் இயக்கத்தில் 1996 இல் வெளியான இந்தியன் திரைப்படம், ஒரு விழிப்புணர்வு ஆக்சன் திரைப்படம் ஆகும். இதில் நெடுமுடி வேணு, சுகன்யா, மனிஷா கொய்ராலா போன்றோர் நடித்துள்ளனர். அப்பொழுது ரிலீஸ் ஆன பாட்ஷா, படையப்பா போன்ற திரைப்படங்களை வசூலில் ஓரங்கட்டியது. உலக அளவில் சுமார் 50 கோடி வசூலை செய்தது. அது மட்டும் இன்றி சிறந்த வெளிநாட்டு மொழி படமாகவும் தேர்வானது, தேசிய விருதும் இந்த படத்துக்கு கிடைத்தது.

லோகேஷ் கனகராஜ்-விக்ரம்: 2022ல் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் வெளியான விக்ரம், ஆக்சன் திரில்லர் திரைப்படமாக திரையரங்குகளை அதிர செய்தது. இத்திரைப்படத்தில் விஜய் சேதுபதி, பகத் பாசில் போன்றோர் நடித்துள்ளனர். இது ஒரு பிளாக்பஸ்டர் படமாக ஆண்டவருக்கு அமைந்தது. இதில் ரா ஏஜென்ட் ஆக நடித்திருப்பார், தனது அதிரடி நடிப்பில் தெறிக்க விட்டிருப்பார். சுமார் 400 முதல் 500 கோடி வரை வசூலை கட்டி தூக்கியது இந்த திரைப்படம்.

Also Read:அம்புட்டு காசுக்கும் கணக்கு காட்ட சொன்ன உயர்நீதிமன்றம்.. கடும் எச்சரிக்கையால் டப்பா டான்ஸ் ஆடிய விஷால்

கௌதம் வாசுதேவ் மேனன-வேட்டையாடு விளையாடு: 2006 இல் கௌதம் வாசுதேவன் இயக்கத்தில் வெளியான வேட்டையாடு விளையாடு, ஆக்சன் திரில்லர் திரைப்படமாக இருந்தது. இதில் ஜோதிகா, கமலினி, பிரகாஷ்ராஜ், டேனியல் பாலாஜி, சலீம் இணைந்து நடித்துள்ளனர். திரையரங்குகளில் ஸ்கிரீன்கள் கிழியும் அளவிற்கு பிளாக்பஸ்டர் ஹிட் அடித்த இத்திரைப்படம் ஆகும். சிறந்த நடிகர் விருது போன்றவை கிடைத்தன. ஹாரிஸ் பாடல்கள் அனைத்தும் இன்றளவிலும் ரசிகர்கள் மத்தியில் மாஸ் காட்டுகிறது. நல்ல விறுவிறுப்பான காட்சிகளை கொண்டு திரைப்படமக இருந்தது.

கேஸ் ரவிக்குமார்-தசாவதாரம்: கே எஸ் ரவிக்குமாரின் இயக்கத்தில் 2008 ஆம் ஆண்டு வெளியான தசாவதாரம் படத்தின் மூலம் ஆண்டவரின் நடிப்பில் பல அவதாரங்கள் வெளியானது. ஜெயப்பிரதா, அசின், கே ஆர் விஜயா போன்றோர் இணைந்து நடித்துள்ளனர். திரைப்படம் அறிவியல் கற்பனை சார்ந்த ஆக்சன் திரில்லர் திரைப்படமாக இருந்தது. திரைப்படத்தில் உலக நாயகனின் 10 கதாபாத்திரங்கள் கண்டு ரசிகர்கள் வாயை போலாகும் அளவுக்கு இருந்தது. அந்த வருடத்தில் வெளியான திரைப்படங்கள் அனைத்தையும் ஓரம்கட்டி, 200 கோடியை வசூலை குவித்து பட்டைய கிளப்பிய திரைப்படமாகும்.

Also Read:நீ அந்த ரெண்டு ஹீரோக்களை வச்சு படம் எடுக்க வேண்டாம்.. வாரிசுக்கு விஜய் போட்ட கட்டளை

Trending News