புதன்கிழமை, டிசம்பர் 25, 2024

இந்த நாவலை படிக்க சொன்ன வெற்றிமாறன்.. மனப்பாடம் பண்ணி தேதியை கொடுத்த கமல்

கமல்ஹாசன் தற்போது லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விக்ரம் படத்தில் நடித்து வருகிறார். இப்படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வந்த நிலையில் திடீரென கமல்ஹாசன் பிக்பாஸ் வீட்டிற்குள் நுழைந்து தனது சேட்டைகளை செய்ய ஆரம்பித்தார். ஒன்னும் தெரியாதது போல் அனைவரிடமும் எதார்த்தமாக பேசும் கமல்ஹாசன் நாளடைவில் பலவிதமான கேள்விகளை கேட்டு குடைச்சல் கொடுக்க ஆரம்பித்து விடுவார்.

விக்ரம் படத்தில் கமல்ஹாசன் காட்சிகள் எடுத்து முடித்து விட்டனர். இதனால் தற்போது கமல்ஹாசன் அடுத்த படத்தின் மீதான கவனத்தை செலுத்தியுள்ளார். மேலும் பல இயக்குனர்களும் கமல்ஹாசனிடம் கதையை கூறியுள்ளனர். ஆனால் கமல்ஹாசன் கதையில் பெரிய அளவில் சுவாரசியம் இல்லை என்பதால் பல இயக்குனரிடமும் கதையில் ஒரு சில மாற்றங்கள் செய்யுங்கள் எனக் கூறியுள்ளார்.

இந்த சமயத்தில் வெற்றிமாறன் தான் படித்த ஏழை குழந்தையின் படிப்பை பற்றிய புத்தகத்தை அப்படியே கொண்டுபோய் கமல்ஹாசனிடம் ஒப்படைத்துவிட்டார்.  இந்தக் கதையைத்தான் உங்களை வைத்து படமாக எடுக்க முடிவு செய்துள்ளேன். நீங்க என்ன சொல்கிறீர்கள் என கேட்டுள்ளார். கமல்ஹாசன் படத்தின் நாவலை படித்து மனப்பாடம் பண்ணி இந்த  படத்தில் நடிக்கிறேன் என கூறியுள்ளார்.

kamal-hassan-cinemapettai
kamal-hassan-cinemapettai

இதனால் தற்போது வெற்றிமாறன் மகிழ்ச்சியில் உள்ளார். வெற்றிமாறன் எப்போதுமே ஒரு நாவலை மையமாகக் கொண்டுதான் படத்தை இயக்குவார். அப்படியே இவர் இயக்கிய படங்கள்தான் அசுரன், விசாரணை. இந்த இரண்டு படங்களுமே ரசிகர்களிடம் நல்ல வரவேற்பைப் பெற்றன.

கமல்ஹாசன் நடிப்பில் வெற்றிமாறன் இயக்கத்தில் படம் உருவாவதால் இப்படத்தின் மீதான எதிர்பார்ப்பு தற்போது அதிகரித்துள்ளது. அதுமட்டுமில்லாமல் கூடிய விரைவில் படப்பிடிப்பை நடத்துவதற்கு படக்குழுவினர் திட்டமிட்டுள்ளனர். கமல்ஹாசன் வெற்றிமாறன் இயக்கும் படத்தில் நடித்துக் கொண்டே பிக்பாஸ் நிகழ்ச்சி தொகுத்து வழங்குவார் என கூறிவருகின்றனர்.

Trending News