விஜய்யை ஓரங்கட்டி கமல்.. கேரளாவில் வசூல் சாதனை படைத்த விக்ரம்

கேரளாவிலும் பட்டையை கிளப்பி வரும் விக்ரம் திரைப்படத்தின் வசூல் சாதனை குறித்த செய்தி இணையத்தில் வைரலாகி உள்ளது. இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில், உலகநாயகன் கமலஹாசன் நடிப்பில் உருவான விக்ரம் திரைப்படம் திரையரங்குகளில் வெளியாகி ரசிகர்களின் பேராதரவை பெற்று வருகிறது.

விஜய்சேதுபதி ,பாஹத் பாசில், காளிதாஸ் ஜெயராம், சூர்யா உள்ளிட்ட அனைத்து பிரபலங்களும் விக்ரம் திரைப்படத்தில் தனது நடிப்பு திறமையை வெளிப்படுத்தி உள்ளனர் இத்திரைப்படத்தில் அமைந்துள்ள ஒவ்வொரு கதாபாத்திரமும் ரசிகர்களின் மனதில் நீங்கா இடம் பிடித்துள்ளது அந்த அளவிற்கு லோகேஷ் கனகராஜ் இத்திரைப்படத்தை தத்ரூபமாக எடுத்துள்ளார்.

தமிழ், தெலுங்கு, ஹிந்தி,மலையாளம் என பேன் இந்தியா மொழிப்படமாக விக்ரம் படம் வெளியான நிலையில், கேரளாவில் 7 நாட்களில் 25 கோடி வரை விக்ரம் திரைப்படம் வசூல் செய்து சாதனை படைத்துள்ளது. பொதுவாக கேரளாவில் நடிகர் விஜய்யின் திரைப்படங்கள் பட்டையை கிளப்பும் அவரின் திரைப்படங்களே அதிக கோடிகளை ஈட்டி டாப் 5 வில் இடம் பிடித்திருக்கும்.

ஆனால் தற்போது டாப் 5 வில் கமலஹாசனின் விக்ரம் திரைப்படம் இடம் பிடித்து வசூல் சாதனையை கேரளாவில் படைத்துள்ளது. ஏற்கனவே உலகநாயகன் கமலஹாசன், விக்ரம் திரைப்படத்தின் வெற்றியை பலவிதமான அன்பளிப்புகளை சர்ப்ரைஸாக படக்குழுவினர்களுக்கும், படத்தில் நடித்தவர்களுக்கும் கொடுத்து வரும் வேளையில், இந்த செய்தி கமலஹாசனுக்கே சர்ப்ரைஸாக அமைந்துள்ளது.

ஆக்சன் திரைப்படமாக உருவாக்கப்பட்ட விக்ரம் திரைப்படம், யாரும் எதிர்பார்த்த அளவுக்கு சாதனையை படைத்து வருகிறது. தமிழகத்தில் மட்டுமே ஏழு நாட்களில் 200 கோடி ரூபாய் வரை வசூல் சாதனை படைத்த நிலையில், இன்னும் 10 நாட்கள் திரையரங்குகளில் ஓடி வந்தால் 300 கோடி லாபம் வரை பார்க்கும் என தெரிவிக்கப்பட்டு வருகிறது.

இதனிடையே விக்ரம் திரைப்படத்தை பிரபல ஓடிடி நிறுவனமான, டிஸ்னி ஹாட்ஸ்டார் கிட்டத்தட்ட 98 கோடி கொடுத்து வாங்கி உள்ள நிலையில், வரும் ஆகஸ்ட் மாதம் வெளியிடப்போவதாக தகவல் வெளியாகியுள்ளது. அதுவரை விக்ரம் திரைப்படம் திரையரங்குகளில் ஓடி மேலும் வசூல் சாதனை படைக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.