வியாழக்கிழமை, ஜனவரி 23, 2025

தேடி போன மோகன்லால்.. தட்டி கழித்த கமலஹாசன், ரிஷப் ஷெட்டி

நடிகர் மோகன்லால் மலையாள திரை உலகின் சூப்பர் ஸ்டார் ஆவார். மலையாள ரசிகர்களுக்கு மட்டுமல்லாமல் ஒட்டு மொத்த இந்திய ரசிகர்களுக்குமே பிடித்த நடிகர் என்றால் அது மோகன்லால் தான். இந்திய சினிமா ரசிகர்களால் லால் ஏட்டன் என்று அன்போடு அழைக்கப்படுகிறார் நடிகர் மோகன்லால்.

ரொம்ப ஆரவாரம், பந்தா இல்லாத தன்னுடைய எதார்த்தமான நடிப்பினால் சினிமா ரசிகர்களை கவர்ந்தவர் தான் நடிகர் மோகன்லால். இவரது நடிப்பில் 2021 ஆம் ஆண்டு ரிலீசான மரைக்காயர் : அரபிக்கடலின் சிங்கம் திரைப்படம் மிகப்பெரிய வெற்றியை அடைந்தது. இந்த படத்தில் நடிகை மஞ்சு வாரியாரும் நடித்திருந்தார்.

Also Read: கமலை காட்டிலும் ரஜினி எவ்வளவோ மேல்.. மேடையில் கிழித்து தொங்க விட்ட பிரபலம்

இந்த நிலையில் நடிகர் மோகன்லால், ஜல்லிக்கட்டு பட இயக்குனர் லீலா ஜோசப் உடன் தன்னுடைய அடுத்த படத்தில் இணைந்திருக்கிறார். இந்தப் படத்திற்கு மலைக்கோட்டை வாலிபன் என்ற பெயரிடப்பட்டிருக்கிறது. இந்தப் படம் அதிக பட்ஜெட் கொண்ட பிரம்மாண்ட படமாக உருவாக்கப்படுகிறது. படத்தின் படப்பிடிப்பு வேலைகள் தற்போது ராஜஸ்தானில் ஆரம்பித்திருக்கிறது.

வழக்கம் போல தற்போது புது ட்ரெண்டில் இருக்கும் மல்டி ஸ்டார்ஸ் படத்தை போல் மலைக்கோட்டை வாலிபனை உருவாக்க திட்டமிட்டு இருக்கிறார் மோகன்லால். இதற்காக இவர் நடிகர் கமலஹாசனை அணுகி இருக்கிறார். கடந்த வாரம் வெளியான செய்திகளில் கூட கமலஹாசனும் நடிகர் ஜீவாவும் இந்த படத்தில் கேமியோ ரோலில் நடிக்க இருப்பதாக சொல்லப்பட்டது.

Also Read: அடுத்த உலக நாயகன் யார் என வெளிப்படையாக சொன்ன கமல்.. நடிப்பு அரக்கனாச்சே

ஆனால் உலகநாயகன் கமலஹாசன் இந்தியன் 2 திரைப்படத்தில் பிஸியாக இருப்பதால் இந்த படத்தை மறுத்துவிட்டார். அதன் பின்னர் மலைக்கோட்டை வாலிபன் பட குழு காந்தார புகழ் இயக்குனர் ரிஷப் ஷெட்டியை அணுகியது. ஆனால் அவரோ தான் அடுத்து கன்னட படத்தில் நடிக்க இருப்பதாக சொல்லி இந்த படத்தை தட்டி கழித்து விட்டார்.

மலையாள சூப்பர் ஸ்டார் மோகன்லால் பொறுத்தவரை நிறைய டாப் ஹீரோக்களுக்காக அவர்களின் படங்களில் கேமியா ரோல் பண்ணியதுண்டு. உலகநாயகன் கமலஹாசன், தளபதி விஜய், மேலும் தற்போது ரஜினிகாந்த் நடிப்பில் உருவாகி கொண்டிருக்கும் ஜெயிலர் படத்தில் கூட நடிக்க இருக்கிறார்.  அப்படிப்பட்ட மோகன்லாலை இந்த கதாநாயகர்கள் டீலில் விடுவது கடும் விமர்சனத்திற்கு உள்ளாகி இருக்கிறது.

Also Read: குருவிடம் சம்பளத்திற்காக மல்லுக்கட்டிய கமல்.. சூட்டிங் ஸ்பாட்டில் நடந்த ரணகளம்

Trending News