வியாழக்கிழமை, ஜனவரி 23, 2025

ஓடுற குதிரைகளை வளைத்து போடும் கமலஹாசன்.. வேடிக்கை பார்க்கும் பொய்க்கால் குதிரைகள்

கமல்ஹாசனின் சினிமா கேரியர் ஒரு நேரத்தில் இருண்டு போய் இருந்தது. அந்த நிலையில் அவருக்கு பெரிய ஒளிவட்டமாய் விடிவு காலம் கொடுத்தவர் தான் லோகேஷ். இவர்கள் கூட்டணியில் வெளிவந்த விக்ரம் படம் அசுர வளர்ச்சியை கொடுத்ததால் கமலஹாசனின் இமேஜ் வேற லெவலுக்கு மாறிவிட்டது. அதன்பின் இந்த புகழை சூதாகரமாக பயன்படுத்தி தொடர்ந்து வெற்றி அடைய வேண்டும் என்று தீர்மானத்துடன் இருக்கிறார்.

அதற்காக நடிப்பையும் தவிர தயாரிப்பிலும் முழு நேரமாக இறங்கி கல்லா கட்ட பல ஏற்பாடுகளை செய்து வருகிறார். இவருடைய ராஜ் கமல் தயாரிப்பு நிறுவனத்தின் மூலம் அதிவேக புத்தியுடன் செயல்படுகிறார். அதற்கான முதல் கட்ட வேலையில் சிவகார்த்திகேயனை வைத்து படம் தயாரிக்கிறார். ஏற்கனவே சிவகார்த்திகேயன் ஒரு லக்கி பாயாக தான் வருகிறார்.

Also read: கடந்த 23 வருடமாக மோதிக்கொண்ட முன்னணி நடிகர்கள்.. கமல்ஹாசனை ஓவர் டெக் செய்த ஹீரோ

முக்கால்வாசி இவர் நடிக்கும் படங்கள் சூப்பர் ஹிட் ஆகி அதிக லாபத்தை தயாரிப்பாளருக்கு கொடுத்திருக்கிறார். அதனால் இவருடன் கூட்டணி வைப்பதில் தீர்மானமாக இருக்கிறார். இதற்கு அடுத்து சிம்புவின் 48வது படத்தையும் இவர் தான் தயாரிக்கிறார். அதற்காக பல வித்தியாசமான ஏற்பாடுகளை செய்ய இருக்கிறார்.

இப்படி அடுத்தடுத்து பல பெரிய ஹீரோக்களை வளைத்து போட்டு விட்டார். அதாவது சிவகார்த்திகேயன், சிம்பு இவர்களைத் தொடர்ந்து தனுஷ், சூர்யா போன்ற பெரிய குதிரைகளை வளைத்துள்ளார். இத்துடன் இவர்களை வைத்து இயக்குவதற்கு பெரிய சூப்பர் இயக்குனருடன் அக்ரிமெண்ட் போட்டுள்ளார். இவர் தயாரிப்பாளராக முழு நேரமும் களத்தில் இறங்கிய பிறகு இவருடைய மூளை ஜெட் வேகத்தில் பறக்கிறது.

Also read: மயில்சாமியை பார்க்க வராத இளம் நடிகர்கள்.. அதிலும் கமல்ஹாசன் இப்படி இருப்பது மிகவும் வருத்தமானது

இவர் இப்படி தொடர்ந்து ஒரு படத்திற்காக எல்லா வேலைகளும் தானாக முன்வந்து செய்வதால் முன்னணி நடிகர்களுக்கும் பெரிய நிம்மதியை கொடுத்து வருகிறது. இவர் இப்படி மெனக்கிடுவதால் கண்டிப்பாக இவர் தயாரிக்கப் போகும் படம் வெற்றி அடையும் அதன் மூலம் நமக்கும் பெரிய லாபம் என்ற சந்தோஷத்தில் முன்னணி ஹீரோக்கள் இருக்கிறார்கள்.

ஆனால் பாவம் இதற்கிடையில் மாட்டிக் கொண்டு தவிப்பது இளம் நடிகர்களான ஜெயம் ரவி, ஆர்யா, கார்த்தி போன்ற இரண்டாம் நிலை ஹீரோக்கள் தான். ஏனென்றால் எல்லா பெரிய ஹீரோக்களையும் தட்டி தூக்கி கைப்பற்றி விட்டார். இப்படி இருக்கையில் இளம் நடிகர்களுக்கு பெரிய இயக்குனர்கள் கிடைக்காமல் முட்டி மோதி அல்லோல பட்டு வருகின்றனர். அதனால் தற்போது இவர்களுடைய நிலைமை சும்மா வேடிக்கை பார்ப்பது போல் ஆகிவிட்டது.

Also read: தீபிகா படுகோனாவால் வாயடைத்துப் போன கமல்.. இருக்கிறதை விட்டு பறக்குறதுக்கு ஆசைப்பட்டால் இதுதான் கெதி

Trending News