திங்கட்கிழமை, ஜனவரி 13, 2025

சன்டிவி பிரபலத்தை அலேக்காக தூக்கிய விஜய் டிவி.. சூடு பிடிக்கும் பிக் பாஸ்

தமிழ் சினிமாவில் பல்வேறு படங்களில் நடித்து உலக நாயகன் என பெயர் பெற்ற கமல்ஹாசன் பிக்பாஸ் நிகழ்ச்சியின் மூலம் தொகுப்பாளராகவும் அறிமுகமானார். ஆரம்ப காலத்தில் பிக்பாஸ் நிகழ்ச்சி என்ன என்றே தெரியாத ரசிகர்களுக்கு அடுத்தடுத்து தனது பாணியில் செயல்படுத்தி ரசிகர்களுக்கு புரியவைத்து பிக்பாஸ் நிகழ்ச்சியை வெற்றியடையும் வைத்தார்.

முதல் சீசன் பெரிய அளவில் வரவேற்பை பெற்றது ஆனால் அடுத்தடுத்து வெளியான சீசனில் ரசிகர்களிடம் பெரிய வரவேற்பு பெறாததால் தற்போது வெளியாகவுள்ள பிக்பாஸ் 5வது சீசனை வித்தியாசமான முறையில் கையாள உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.

மேலும் இந்த சீசன் முழுக்க முழுக்க கடுமையான போட்டியாளர்களை வைத்து ஆர்வமாக பிக்பாஸ் நிகழ்ச்சி கொண்டு செல்வதற்கு கமல்ஹாசன் திட்டமிட்டுள்ளதாக கூறிவருகின்றனர். இதற்கான போட்டியாளர்களை சமீபத்தில் வெளியானது இந்த சீசனில் இருந்து பிக் பாஸ் மீதான எதிர்பார்ப்பும் அதிகரித்துள்ளது.

imman-annachi-cinemapettai
imman-annachi-cinemapettai

தற்போது சன் டிவியில் குட்டி சுட்டீஸ் மற்றும் சொல்லுங்கண்ணே சொல்லுங்க போன்ற நிகழ்ச்சிகள் மூலம் பிரபலமான இமான் அண்ணாச்சியும் பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்துகொள்ள இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. தற்போது பிக்பாஸ் நிகழ்ச்சி மீதான எதிர்பார்ப்பும் அதிகரித்துள்ளது.

இன்னும் ஓரிரு நாட்களில் விஜய் டிவி பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொள்ளும் போட்டியாளர்களை அதிகாரப்பூர்வமாக அறிவிக்க திட்டமிட்டு உள்ளனர் மேலும் பிக்பாஸ் நிகழ்ச்சி ப்ரோமோ வீடியோ வெளியாகி ரசிகர்களிடம் நல்ல வரவேற்பைப் பெற்றது.மேலும் இன்னும் ஒரு சில போட்டிகளில் கலந்து வைக்க முயற்சி செய்து வருவதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

Trending News