இந்திய சினிமா துறையில் முன்னணி நடிகரான கமலஹாசன் அவர்கள் நடிப்பு, இயக்கம், பாடலாசிரியர், பாடகர், நடன கலைஞர், அரசியல் என்று பல துறைகளிலும் தனது பயணத்தை தொடங்கி இருக்கிறார்.
1960ஆம் ஆண்டு குழந்தை நட்சத்திரமாக “களத்தூர் கண்ணம்மா” என்ற திரைப்படம் மூலம் தனது நடிப்பை துறையை தொடங்கினார். அந்த படத்திற்கு குடியரசுதலைவர் விருதை பெற்றார். தன்னுடைய அசாத்திய நடிப்பால் ரசிகர்களிடையே பெரும் புகழ் பெற்றவர்.
கமல் அனைத்து கதாபாத்திரத்தையும் கனகச்சிதமாக நடிப்பார் இருப்பினும் அவ்வப்போது பல சர்ச்சைகளில் சிக்கிக் கொள்வதும் அவருக்கு வாடிக்கையான ஒன்று. எந்த நடிகையாக இருந்தாலும் முத்தக்காட்சியில் ஓவராக நடிப்பார் என்று அந்த நாட்களில் பத்திரிகைகள் செய்தியை வெளியிட்டிருந்தன.
மேலும் ஒரு பிரபல தயாரிப்பாளர் ராஜன் அவர்கள் கமலஹாசனை பற்றிய பல எதிர்மறையான செய்திகளை பகிர்ந்துள்ளார். கமல் அவர்கள் தொட்ட எந்த காரியமும் வெற்றி பெற்றதில்லை என்று கூறி அதற்கு உதாரணமாக நடிகர் ஜெய்சங்கர் அவர்கள் கட்டிய பள்ளிக்கூடத்தை கமலஹாசன் தான் திறந்து வைத்துள்ளார்.
ஆனால் அந்த பள்ளிக்கூடம் தொடர்ந்து செயல்படாமல் பாதியிலேயே மூடப்பட்டது என்று தனது கருத்தை வெளியிட்டிருக்கிறார். மேலும் அவர் தன்னை சந்திக்க வரும் பிரபலங்களையும் ரசிகர்கள் உள்பட பலரை நீண்ட நேரம் காக்க வைப்பாராம்.
அவ்வாறு பிரபல இயக்குனர் பாலச்சந்தரின் மகள் கமலஹாசனை சந்திப்பதற்கு அப்பாயின்மென்ட் 11 மணிக்கு வாங்கி இருக்கிறார். ஆனால் அவரை 3 மணிக்கு தான் கமலஹாசன் அவர்கள் சந்தித்தாராம். தன்னுடைய குருநாதர் மகளுக்கு இந்த நிலை என்று வட்டாரங்கள் பேசி வருகின்றன.
இவ்வாறு பல சர்ச்சைகள் சினிமா துறை சார்பாக இருக்க அரசியல் நிலை அதைவிட படுமோசம் தேர்தல் சமயத்தில் பிரச்சாரத்தில் ஈடுபட்ட கமல் பேசும்போது மைக் வேலை செய்யாததால் தனது கட்சிக்காரர் கட்சியின் சின்னத்தை அடித்ததும் பெரும் சர்ச்சையாக பரவியது. தற்போது அவருடைய கட்சியின் நிலை பெரும் கவலைக்கிடமாக உள்ளது என்று செய்திகள் வெளிவருகின்றன.