வியாழக்கிழமை, ஜனவரி 23, 2025

ரஜினியை விட ஐந்து மடங்கு சம்பளம் அதிகமாக வாங்கிய கமல்.. எந்த படத்தில் தெரியுமா?

ரஜினி-கமல் இப்போது உச்சத்தில் இருக்கும் நடிகர்கள். கமலை விட ரஜினிக்கு அதிக மாஸ் இருக்கின்றது என்பது அனைவரும் அறிந்த ஒரு விஷயம். ஆனால் ஆரம்ப காலத்தில் கமலை ஒப்பிடும் போது ரஜினி 5 மடங்கு சம்பளம் கம்மியாக ஒரு படத்தில் வாங்கி இருக்கிறார்.

ரஜினி, கமல் இருவருக்குமே சினிமா என்பது ஈஸியான விஷயமாக அமைந்து விடவில்லை. கமல் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகி பின்னர் நடன இயக்குனர், உதவி இயக்குனர், கதை ஆசிரியர் என சினிமாவில் கொஞ்சம் கொஞ்சமாக முன்னேறி கதாநாயகன் ஆனவர்.

Also read: பத்திரிக்கையாளரை ஓட ஓட விரட்டிய ரஜினி.. நல்ல சம்பவம் நடக்கும் போது இப்படியா பண்றது தலைவரே

ரஜினி கமல் நடித்த ஒரு படத்தில் சிறிய காட்சியில் வந்து பின்பு வில்லனாக சில படங்கள் நடித்து, கமலுடன் இரண்டாவது கதாநாயகனாக நடித்து அதன் பின்னர் தனக்கென்று ஒரு தனி ஸ்டைல் கொண்டு வந்து மாஸ் ஹீரோவாக மாறியவர். இவர்கள் இருவருக்குமே கோலிவுட்டில் ஒரு பாதையை அமைத்து கொடுத்தவர் இயக்குனர் இமயம் கே பாலச்சந்தர்.

கமலுக்கும் ரஜினிக்கும் இருக்கும் ஒரு மிகப்பெரிய வித்தியாசம் என்னவென்றால் அவர்களுடைய சினிமா அனுபவம். கமல் தன்னுடைய ஐந்து வயதிலேயே சினிமாவிற்கு வந்து விட்டார். எனவே கமலுக்கு ரஜினியை விட அனுபவம் அதிகம். அப்போதெல்லாம் அனுபவத்தை வைத்தே சம்பளம் பேசுவார்கள்.

Also read: ரஜினியின் நடிப்பில் திரைப்படமாக உருவான 2 நாவல்கள்.. கொடூர வில்லனாக கலக்கிய சூப்பர் ஸ்டார்

AVM ப்ரொடக்சனில் இயக்குனர் பாரதிராஜா இயக்கத்தில் ரஜினி, கமல், ஸ்ரீதேவி, காந்திமதி, கவுண்டமணி, பாக்யராஜ் நடித்த திரைப்படம் தான் பதினாறு வயதினிலே. இந்த திரைப்படம் கோலிவுட்டின் ஒரு மிகப்பெரிய மைல் கல் என்றே சொல்லலாம். இந்த படத்தில் கமல் மற்றும் ஸ்ரீதேவியை விட ரஜினிக்கு சம்பளம் கம்மி.

பதினாறு வயதினிலே படத்தில் கமல் கதாநாயகனாகவும், ரஜினி வில்லனாகவும் நடித்தனர். இந்த திரைப்படத்தில் ரஜினிக்கு 5000 மட்டுமே. ஆனால் கமலுக்கு 25,000 சம்பளம் கொடுத்து இருக்கிறார்கள். இது ரஜினியை விட 5 மடங்கு அதிகம்.

Also read: ரஜினியை வந்து என் படத்தில் நடிக்க சொல்லுங்கள்.. ஆவேசமாய் வந்த வாய்ப்பை மறுத்த குணச்சித்திர நடிகர்

Trending News