வெள்ளிக்கிழமை, டிசம்பர் 27, 2024

வாணி கணபதி போல் ஏமாறாமல் இருந்த சரிகா.. குழந்தை பிறந்த பின் நடந்த கமலின் கல்யாணம்

Actor Kamal: உலகநாயகன் கமலஹாசன் நடிப்பால் பல புகழைப் பெற்றாலும் காதல் சர்ச்சைகளிலும் சிக்கி இருக்கிறார். அந்த காலத்தில் கமலுடன் நடிக்க பல நடிகைகள் போட்டி போட்டுக் கொண்டிருந்த நிலையில் சில நடிகைகள் கமலே வேண்டாம் என்று சொன்ன விஷயத்தை நாம் கேட்டிருக்கிறோம்.

இதற்கு காரணம் அப்போது கமலின் படங்களில் நெருக்கமான காட்சிகள் அதிகம் இடம் பெற்று வந்தது. அதுவும் கதாநாயகி ரேகாவுக்கே தெரியாமல் முத்த காட்சி எடுக்கப்பட்டதாக அவரை ஒரு பேட்டியில் கூறியிருந்தார். இவ்வாறு சினிமாவில் ஒருபுறம் இருக்க நிஜ வாழ்க்கையிலும் கமல் மன்மதனாக வலம் வந்துள்ளார்.

Also Read : மயில் நடிகையை பெண் கேட்டு சென்ற ரஜினி.. கமலுக்கே இல்ல, உங்களுக்கு எப்படி?

இதுகுறித்து இதயக்கனி என்பவர் ஒரு யூடியூபில் பேசியிருக்கிறார். அதாவது கமல் முதலாவதாக நடிகை வாணி கணபதியை திருமணம் செய்து கொண்டார். ஆனால் திருமணத்திற்கு முன்பே கமலால் வாணி கணபதி கருவுற்று இருந்தார். அப்போது இந்த விஷயம் வெளியில் தெரிந்தால் கமலின் பெயர் டேமேஜ் ஆகும் என்பதால் கலைக்க சொன்னதாக இதயக்கனி கூறியிருந்தார்.

மேலும் அடுத்ததாக திருமணத்திற்கு முன்பே கணவன் மனைவியாக நடிகை சரிகா உடன் வாழ்ந்துள்ளார் கமல். இதனால் சரிகா கர்ப்பமான போது எந்த கருவையும் கமல் கலைக்க சொன்னாராம். வாணி கணபதி போல் தவறான முடிவு எடுக்காமல் சரியாக என் குழந்தைக்கு அப்பா கமல் என பத்திரிக்கையாளர்களிடம் கூறிவிட்டார்.

Also Read : சத்யராஜுக்கு தானாக அமைந்த 5 கேரியர் பெஸ்ட் மூவிஸ்.. ரஜினி கமல் போல் இமேஜ் குறையாத மகா நடிகன்

இதனால் அப்போது கமலுக்கும் என்ன செய்வதென்று தெரியவில்லை. அதன் பிறகு 1986 ஆம் ஆண்டு கமல் மற்றும் சரிகாவின் திருமணத்திற்கு முன்பே பிறந்த குழந்தைதான் நடிகை சுருதிஹாசன். அதன் பிறகு 1988 ஆம் ஆண்டு சிவாஜி கணேசன் முன்னிலையில் கமல் சரிகாவை திருமணம் செய்து கொண்டார்.

அதன் பிறகு தான் இவர்களுக்கு இரண்டாவது மகள் அக்ஷரா ஹாசன் பிறந்துள்ளார். மேலும் கமலஹாசன் மற்றும் சரிகா இருவரும் கடந்த 2004 ஆம் ஆண்டு சட்டபூர்வமாக விவாகரத்து பெற்று பிரிந்து விட்டனர். இவ்வாறு கமலை பற்றி வெளிவராத பல விஷயங்களை இதயகனி பேசி இருக்கிறார்.

Also Read : அட ரஜினி, விஜய் கையிலேயே இத்தனை படங்கள் இல்லையே.. கமல் லிஸ்டில் இருக்கும் 4 படங்கள்!

Trending News