திங்கட்கிழமை, டிசம்பர் 23, 2024

பிக் பாஸ் சீசன் 6 உறுதியான 11 போட்டியாளர்கள்.. ஏஜெண்ட் விக்ரமுக்கு இவ்வளோ கோடி சம்பளமா?

பிக்பாஸ் சீசன் 6ல் களமிறங்க இருக்கும் 11 போட்டியாளர்களின் லிஸ்ட் வெளியாகி இருக்கிறது. சீரியல் நடிகர்கள், சினிமா நடிகர்கள், பாடகர்கள், காமெடி நடிகர்கள் என எப்போதும் போல எல்லா துறையும் சேர்ந்தவர்களை ஒன்றாக களமிறக்குகின்றனர். லொஸ்லியா, அனிதா சம்பத் இவர்களை தொடர்ந்து இந்த சீசனிலும் ஒரு செய்தி வாசிப்பாளர் பங்கேற்கிறார்.

பிக்பாஸுக்கு நேர்மறை, எதிர்மறை என்று கலவையான விமர்சனங்கள் உண்டு. பிக் பாஸ் மூன்றாவது சீசன் மக்களால் அதிகமாக ரசிக்கப்பட்ட ஒன்று. கடைசி சீசன் விஜய் டிவி நடிகர் ராஜூவினால் பார்த்தவர்கள் அதிகம். ஒரு எபிசோடுக்கு கமல் 4 முதல் 5 கோடி வரை சம்பளம் வாங்க உள்ளார். இதை வைத்து பார்க்கும்போது இந்த பிக் பாஸ் சீசன் 6க்கு மட்டும் கிட்டத்தட்ட 70 கோடி வரை சம்பளம் பேசப்பட்டுள்ளது. இப்போது 6வது சீசனுக்கான போட்டியாளர்கள் லிஸ்ட் வந்து இருக்கிறது.

Also read: கவர்ச்சி நடிகைக்கு அழைப்பு விடுத்த பிக்பாஸ்.. டிஆர்பிக்காக செய்யும் தரைலோக்கல் வேலை

ஷில்பா மஞ்சுநாத்: ஷில்பா மஞ்சுநாத் நடிகை மற்றும் மாடலிங் துறையை சேர்ந்தவர். கிருத்திகா உதயநிதி இயக்கத்தில் விஜய் ஆண்டனி நடித்த காளி திரைப்படத்தில் அறிமுகமானவர். ஹரிஷ் கல்யாணுடன் ‘இஸ்பேட் ராஜாவும் இதய ராணியும்’ திரைப்படத்தில் நடித்திருந்தார்.

மோனிகா (டி. இமானின் முன்னாள் மனைவி): இசையமைப்பாளர் டி இமானின் முன்னாள் மனைவி மோனிகா. இமான் தன்னுடைய மனைவியை விவாகரத்து செய்து விட்டதாக அறிவித்திருந்தார். இப்போது இரண்டாம் திருமணம் செய்து இருக்கிறார். இமானுக்கு எதிராக பல கருத்துக்களை இவர் தன்னுடைய சமூக வலைத்தளத்தில் பதிவிட்டு இருந்தார்.

தர்ஷா குப்தா: தர்ஷா குப்தா ஏற்கனவே விஜய் டிவியின் ‘செந்தூர பூவே’ சீரியலிலும் , ‘குக்கு வித் கோமாளி’ நிகழ்ச்சிகளிலும் பங்கேற்று இருந்தார்.

ராஜ லட்சுமி (பாடகி): நாட்டுப்புற பாடல்கள் மூலம் ரசிகர்களிடையே அறிமுகமானவர் ராஜ லட்சுமி. விஜய் டிவியின் சூப்பர் சிங்கர் நிகழ்ச்சிக்கு பிறகு இவருக்கு சினிமாவிலும் பாட வாய்ப்பு கிடைத்திருக்கிறது.

கார்த்தி குமார் ( பாடகி சுசித்ராவின் முன்னாள் கணவர் ): கார்த்திக் குமார் கண்ட நாள் முதல், அலைபாயுதே, யாரடி நீ மோகினி திரைப்படங்களில் நடித்திருக்கிறார். இவர் பாடகி சுசித்ராவின் முன்னாள் கணவர்.

Also read: ரக்சனை தொடர்ந்து சீசன்6ல் களமிறங்கும் 4 போட்டியாளர்கள்.. வைரலாகும் பிக்பாஸ் அப்டேட்

செய்தி வாசிப்பாளர் ரஞ்சித்: ரஞ்சித் பாலிமர் சேனலில் செய்தி வாசிப்பாளராக இருந்தவர். இப்போது அந்த சேனலில் இருந்து விலகி விட்டார். வித்தியாசமான செய்தி களத்திற்கும், வாசிப்பிற்கும் பிரபலமானவர்.

ஸ்ரீநிதி: ஜீ தமிழ் சீரியலில் நடித்து பிரபலமானவர் ஸ்ரீநிதி. இவர் சமீப காலங்களில் பெர்சனலாக பிரச்சனையால் பல பிரச்சனைகளை சந்தித்தார். இவர் தன்னுடைய சின்னத்திரை நண்பர்களை பற்றி பல பேட்டிகளில் பேசி பரபரப்பை கிளப்பினார்.

சத்யா சீரியல் புகழ் ஆயிஷா: ஆயிஷா முதலில் விஜய் டிவியில் சீரியலில் அறிமுகமானார். பின்னர் சில பிரச்சனைகளால் அந்த சேனலில் இருந்து விலகி ஜீ தமிழின் சத்யா சீரியலில் நடித்தார்.

GP முத்து: டிக் டாக் மூலம் மக்களிடையே பிரபலமானவர் GP முத்து. இப்போது இவருக்கு குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை ஒரு ரசிகர்கள் பட்டாளமே இருக்கிறது. இவர் கடந்த சீசனிலேயே பங்கேற்பார் என அதிகம் எதிர்பார்க்கப்பட்டார்.

ரக்சன்: ரியோ, ராஜு வரிசையில் களமிறங்கும் அடுத்த விஜய் டிவி பிரபலம் ரக்சன். ரக்சன் கலக்க போவது யாரு, குக்கு வித் கோமாளி நிகழ்ச்சியின் தொகுப்பாளர்.

டிடி:திவ்ய தர்ஷினி விஜய் டிவியின் முக்கியமான ஒரு அங்கம் என்றே சொல்லலாம். உடல் நல பாதிப்பால் இப்போது இவர் அவ்வளவாக எந்த நிகழ்ச்சிகளிலும் கலந்து கொள்ளாமல் இருக்கிறார்.

Also read: பிக்பாஸ் சீசன் 6-க்கு உறுதியான முதல் விவாகரத்து போட்டியாளர்.. ஸ்கெட்ச் போட்டு தூக்கிய விஜய் டிவி

Trending News