வெள்ளிக்கிழமை, ஜனவரி 10, 2025

8 மணி நேரம் டிவியில் ஓடிய ஒரே படம் இதுதான்.. அதுவும் கமல் படம்

இப்போதுதான் திரும்பிய பக்கம் எல்லாம் ஆயிரத்தெட்டு சேனல்கள் இருக்கின்றன. சேனல்களை விட இப்போதெல்லாம் படங்களை செல்போன் போன்றவற்றிலேயே பார்த்து விடுகின்றனர். எல்லார் வீட்டிலும் டிவி என்பது வெறும் பேருக்கு தான் இருக்கிறது.

ஆனால் அப்போதெல்லாம் அப்படி கிடையாது. ஊருக்கு ஒரு சிறு டிவிதான் இருக்கும். அதுவும் ஞாயிற்றுக்கிழமை ஆகிவிட்டாலும் ஒரே இடத்தில் கூடி பார்க்கும் வழக்கமும் இருந்து வந்தது. ஆனால் இப்போது திரும்பிய இடமெல்லாம் ஸ்மார்ட் போன்கள் என அனைவரையும் அடிமையாக்கி விட்டது.

இப்போதெல்லாம் ஒரு படம் போட்டால் அதில் முக்கால்வாசி படத்தை சரிசெய்துவிட்டு விளம்பரம் போட்டு பார்ப்பவர்களின் பொறுமையை சோதித்து வருகின்றனர். உண்மையை சொல்ல வேண்டும் என்றால் இப்போதெல்லாம் டிவி சேனல் படம் பார்ப்பது குறைந்து விட்டது. ஒரு காலத்தில் 6 மணிக்கு சன் டிவியில் படம் போடுவார்கள் என்றால் குடும்பமே ஒரு இடத்தில் உட்கார்ந்து பார்ப்பார்கள்.

ஒரு படம் பெரும்பாலும் ஒரு சேனலில் கிட்டத்தட்ட 5 மணி நேரம் மட்டுமே ஒளிபரப்பப்படும். ஆனால் கமலஹாசன் நடித்த ஒரே ஒரு படம் மட்டும் கிட்டத்தட்ட எட்டு மணி நேரம் ஒளிபரப்பாகியது என்று சொன்னால் நம்ப முடிகிறதா. ஆம் அப்படி ஒரு சம்பவம் நடந்துள்ளது.

தமிழ்நதியின் ஷங்கர் கூட்டணி வெளியாகி வசூல் ரீதியாகவும் அனுபவ ரீதியாக மிகப்பெரிய வரவேற்பை பெற்று இந்திய சினிமாவிற்கு முன்னுதாரணமாக அமைந்து திரைப்படம்தான் இந்தியன். இந்தப்படம் 1980-ஆம் ஆண்டு தீபாவளியன்று ராஜ் டிவியில் ஒளிபரப்பப்பட்டது.

indian
indian

மாலை 4 மணிக்கு ஆரம்பித்த இந்தியன் திரைப்படம் இரவு 12 மணிக்குத் தான் முடிவடைந்தது. இந்தியன் படத்தின் நீளமும் சுமார் மூன்று மணி நேரத்திற்கும் மேலாக இருக்கும். அதில் விளம்பரம் அது இது என போட்டு கிட்டத்தட்ட எட்டு மணி நேரம் பார்வையாளர்களின் பொறுமையை சோதித்துள்ளது இந்தியன் திரைப்படம்.

Trending News